Published:Updated:

``தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல்துறை!" - முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர்

``காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்'' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

``தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல்துறை!" - முதல்வர் ஸ்டாலின்

``காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்'' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
முதலமைச்சர்

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``காவல்துறை மக்களோடு சேர்ந்து நின்றால்தான் குற்றங்கள் குறையும். மக்களோடு காவல்துறை விலகியிருந்தால் குற்றங்கள் பெருகும். காவல்துறை நம் நண்பர் என்று சொல்லும் அளவுக்குக் காவலர்கள் செயல்படவேண்டும். அரசியல் ரீதியாகவும், சாதி-மத ரீதியாகவும் வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும். போதைப்பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். கூலிப்படை, கள்ளசாராயம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மக்களின் காவலர்களாக செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் மற்றொரு கை காவல்துறை. எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் வழங்கி வருகிறோம். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும். ஒரு காவலரோ, காவல் நிலையமோ தவறு செய்வதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது. தலைக்குனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக் கூடாது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism