Published:Updated:

``ஆளுநர் தன் கடமையைச் செய்யவில்லை... மசோதாவை மீண்டும் அனுப்புவோம்'' - முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின்

`கடந்த ஆண்டு, செப்டம்பர் 13 அன்று நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை 142 நாள்கள் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது மசோதாவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியுள்ளார்.' - ஸ்டாலின்.

``ஆளுநர் தன் கடமையைச் செய்யவில்லை... மசோதாவை மீண்டும் அனுப்புவோம்'' - முதல்வர் ஸ்டாலின்

`கடந்த ஆண்டு, செப்டம்பர் 13 அன்று நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை 142 நாள்கள் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது மசோதாவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியுள்ளார்.' - ஸ்டாலின்.

Published:Updated:
ஸ்டாலின்

நீட் விளக்கு மசோதா தொடர்பாக, இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க உட்பட 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், விரைவில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்புவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான தேதியை சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
அனைத்துக்கட்சிக் கூட்டம்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தமிழகத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வு குறித்து ஆலோசிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து அதன் ஆலோசனைப்படி, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் 13/9/2021 அன்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் தன் அரசியல் சட்ட கடமையைச் செய்யவில்லை. பிறகு கடந்த ஜனவரி 8-ம் தேதி இது குறித்து நாம் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தி நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி-க்கள் குழு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆளுநர் அலுவலக அறிக்கை
ஆளுநர் அலுவலக அறிக்கை

2007-ல் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுக்கு 87 நாள்களுக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டு, செப்டம்பர் 13 அன்று நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை 142 நாள்கள் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது மசோதாவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியுள்ளார். அதில் `நீட் தேர்வு செல்லும்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது வேறு, தமிழக சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் என்பது வேறு. அதனால்தான் நாம் குடியரசுத் தலைவர் ஒப்புதலைக் கோருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism