Published:Updated:

நீட் விலக்கு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், அரசுக்கே திருப்பியனுப்பியதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நீட் விலக்கு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், அரசுக்கே திருப்பியனுப்பியதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் `நீட் விலக்கு மசோதா'வை தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிவைத்தார். அதனால், அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, தி.மு.க அரசு இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிப்ரவரி 5-ம் தேதி (இன்று) ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, கட்சிகளுக்கு அழைப்புவிடுத்தது.

இந்தக் கூட்டத்தில் பாஜக-வைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டு தமிழக அரசிடம் தங்கள் கருத்துகளை முன்வைப்பார்கள் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இன்று காலை 11 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள தி.மு.க உட்பட 13 கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்புவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக
மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``தமிழக அரசுக்கு ஆளுநர் அளித்த விளக்கத்தை தி.மு.க வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்காது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னதாக நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் கலந்துகொண்ட விஜயபாஸ்கர் நீட் விலக்குக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்கப்போவதில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism