Published:Updated:

ஆறு பேர் விடுதலை: ``மனிதநேய அடிப்படையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்" - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

``பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன்." - முதல்வர் ஸ்டாலின்

ஆறு பேர் விடுதலை: ``மனிதநேய அடிப்படையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்" - முதல்வர் ஸ்டாலின்

``பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன்." - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனைத் தொடர்ந்து தற்போது நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித்தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களின் நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துவந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, முதன்முதலில் 2000-ம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசுதான்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - உச்ச நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. ஏழு பேர் விடுதலையில் இது முதற்கட்ட வெற்றியாக அமைந்தது. அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்திருக்கும் இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. மனிதநேயத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டுவரும் அனைவருக்குமான வெற்றி இது என்று தெரிவித்துக்கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இந்தத் தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது" என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.