Published:Updated:

தேவர் குருபூஜை: மருத்துவர்களின் அறிவுறுத்தல்; முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

முதல்வர் ஸ்டாலின்

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் முதல்வர் ஸ்டாலினின் நாளைய பயணம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

தேவர் குருபூஜை: மருத்துவர்களின் அறிவுறுத்தல்; முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் முதல்வர் ஸ்டாலினின் நாளைய பயணம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

ராமநாதபுரத்தில் நாளை நடைபெறவிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவரின் பயணம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

நேற்றிரவு, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமும், முதுகுவலி காரணமாக வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்டது என அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி கோரிய மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், முதல்வரின் நாளைய பயணம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``முதலமைச்சருக்கு முதுகுவலி ஏற்பட்டிருப்பதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். எனவே, வரும் 30-10-2022 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறவிருக்கும் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில், முதலமைச்சர் சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் விழாவில் நேரில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.