Published:Updated:

கிராமசபைக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பாப்பாபட்டியைத் தேர்வு செய்தது ஏன்?!

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்புக்கு வந்த நிலையில், தான் கலந்துகொள்ளும் முதல் கிராமசபைக் கூட்டம் முக்கியமான ஊராட்சியாக இருக்க வேண்டுமென முடிவு செய்து பாப்பாபட்டியை தேர்வு செய்திருக்கிறார். ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்வது அனைவராலும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

பாப்பாபட்டி கிராமசபை
பாப்பாபட்டி கிராமசபை

அதற்குக் காரணம் பாப்பாபட்டியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

திமுக கடந்த 2006- ல் ஆட்சிக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தது. அப்போது பல உள்ளாட்சி அமைப்புகள் சுழற்சிமுறையில் பட்டியல் சமூக மக்கள் போட்டியிடும் வகையில் அறிவிக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழகத்திலுள்ள சில ஊராட்சிகளில் பிரச்னை ஏற்பட்டது. முக்கியமாக மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் , விருதுநகர் மாவட்டங்களில் கொட்டக்காஞ்சியேந்தல் ஊராட்சிகள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கிராம சபை என்பது மக்களின் பாராளுமன்றம்!' - விழிப்புணர்வை ஏற்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள்

அரசுத் தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுவரும் பட்டியல் சமூகத் தலைவர்களை ராஜினாமா செய்யவைத்து உள்ளாட்சித் தேர்தலை கேலிக்கூத்தாக்கிவந்தார்கள். இதனால் இந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

வருகைதந்த மக்கள்
வருகைதந்த மக்கள்

இதை இப்படியே தொடரவிடக் கூடாது என்று முடிவு செய்த, அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அப்போது மதுரை கலெக்டராக இருந்த உதயச்சந்திரன் மூலம் சம்பந்தப்பட்ட ஊர்காரர்களிடம் கடுமையாகப் பேசி தேர்தலை நடத்தினார்.

தங்கள் ஊரில் பட்டியலின ஊராட்சித் தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பாப்பாபட்டி ஊராட்சியிலுள்ள குறிப்பிட்ட சிலர் முரண்டு பிடித்தாலும், தேர்தல் நடத்தி பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

அவருக்கு அரசுத் தரப்பில் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அது முதல் தொடர்ந்து பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுவருகிறார்கள். ஊர் மக்கள் மத்தியிலும் மன மாற்றம் ஏற்பட்டு சமூக மாற்றத்தை எற்றுக்கொண்டார்கள்.

பாப்பாபட்டி கிராம சபை
பாப்பாபட்டி கிராம சபை

இது சாதாரண விஷயமல்ல. சட்டத்தின் மூலம் சமூகத்தில் மாறுதலைக் கொண்டுவந்தாலும், மக்கள் மனம் மாற்றமில்லாமல் அது சாத்தியமாகாது.

தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்புக்கு வந்த நிலையில், தான் கலந்துகொள்ளும் முதல் கிராமசபைக் கூட்டம் முக்கியமான ஊராட்சியாக இருக்க வேண்டுமென முடிவு செய்து சமூகப் புரட்சி நடந்த பாப்பாபடியை தேர்வு செய்து இன்று அங்கு வருகை தருகிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு