Published:Updated:

அன்று, `நானே வந்து திறந்து வைப்பேன்’ என்ற ஸ்டாலின் - சிங்கம்புணரி சமத்துவபுரம் விழாவின் பின்னணி

ஸ்டாலின்

சிங்கம்புணரி சமத்துவபுரத்தைத் திறந்துவைத்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சபதமும் அடங்கியுள்ளது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

அன்று, `நானே வந்து திறந்து வைப்பேன்’ என்ற ஸ்டாலின் - சிங்கம்புணரி சமத்துவபுரம் விழாவின் பின்னணி

சிங்கம்புணரி சமத்துவபுரத்தைத் திறந்துவைத்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சபதமும் அடங்கியுள்ளது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

Published:Updated:
ஸ்டாலின்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்துகொள்ள நேற்று மதுரை வந்த முதலமைச்சருக்கு மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து புறப்பட்டவர், மதுரை நத்தம் சாலையில் ஏழு தளங்களுடன் 114 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் கலைஞர் நினைவு நூலகப் பணிகளைப் பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டவர், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். சில மாற்றங்களையும் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பின்னர், அங்கிருந்து கிளம்பியவர் மேலூர் தும்பைப்பட்டியிலிருக்கும் தனியார் ஹோட்டலில் இரவு தங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று காலை சிவகங்கை மாவட்டத்துக்குச் சென்றவர், சிங்கம்புணரி தாலுகாவில் வேங்கைப்பட்டி சமத்துவபுரத்தை திறந்துவைத்து பயனாளிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சிங்கம்புணரி சமத்துவபுரத்தைத் திறந்துவைத்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சபதமும் அடங்கியுள்ளது என்ற தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, "சாதி, மத வேறுபாடுகளை மாற்றவும், தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கவும், அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை நிலைநிறுத்தவும் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான் சமத்துவபுர திட்டம். கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகமெங்கும் தாலுகாவுக்கு ஒன்று என்ற கணக்கில் 100-க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுபோலத்தான் கடந்த தி.மு.க ஆட்சியில் சிங்கம்புணரி வேங்கைப்பட்டியில் சமத்துவபுரம் அமைக்க பணிகள் தொடங்கியது. அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் தொய்வடைந்தது. அரசியல் கட்சிகள் வலியுறுத்த அதற்குப் பிறகும் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருந்தது. மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் வீடுகள் சிதிலமடைந்து வளாகத்துக்குள் புதர்கள் வளர்ந்து சமூக விரோதிகளின் தங்குமிடமாக மாறியது. அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெரியகருப்பன் பலமுறை வலியுறுத்தியும் அ.தி.மு.க அரசு ஆர்வம்காட்டவில்லை.

அன்று, `நானே வந்து திறந்து வைப்பேன்’ என்ற ஸ்டாலின் - சிங்கம்புணரி சமத்துவபுரம் விழாவின் பின்னணி

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மு.க.ஸ்டாலினிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நானே வந்து திறந்துவைப்பேன்’ என்று தெரிவித்தார். அதை இன்று நிறைவேற்றிக் காட்டிவிட்டார்" என்றனர்.

அதைத் தொடர்ந்து காரையூரில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு 40,000 பயனாளிகள் வந்திருந்தனர். அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism