Published:Updated:

``தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு கவலை கொள்ளும் வகையிலிருக்கிறது!" - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஸ்டாலின்

``எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும்." - முதல்வர் ஸ்டாலின்

``தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு கவலை கொள்ளும் வகையிலிருக்கிறது!" - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

``எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும்." - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு வழிவகை செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ``ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களிலிருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது... தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தை உறுதி செய்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி அவசியமானது. ஆனால், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவுக்கு மட்டுமே உள்ளது. 

பிரதமர் மொடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மொடி - முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடைக்கால மின் தேவையைப் பூர்த்தி செய்திட நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரயில்களில் ரேக்குகள் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை எனத் தெரியவருகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்குக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தைப் பொறுத்தவரை, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 இரயில்வே ரேக்குகள் தேவைப்படுகின்றன.  இருப்பினும், ஒரு நாளைக்குச் சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே தற்போது ரயில்வேயால் வழங்கப்படுகின்றன. 

நிலக்கரி
நிலக்கரி

இந்த நிலையில், உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தடையற்ற மின் விநியோகத்தைப் பராமரிப்பதற்காக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரத்தைக் கணிசமாகப் பாதிக்கும். 

மின்சாரம்
மின்சாரம்

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க முடியும். இந்த விஷயத்தில் இந்தியப் பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism