Published:Updated:

சூடுபிடிக்கும் கோவை சூயஸ் ஒப்பந்த விவகாரம்! - போராட்டத்துக்கு முன்பே மாநகராட்சி கொடுத்த விளக்கம்

கோவை, குடிநீர் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நாளிதழ் விளம்பரத்தில் விளக்கமளித்துள்ளது.

கோவை குடிநீர்
கோவை குடிநீர்

கோவையில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன், ரூ.3,167 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம். 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக இந்த ஒப்பந்தம் என்று கூறப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கோவை குடிநீர்
கோவை குடிநீர்

``அத்தியாவசிய தேவையான குடிநீரை தனியாரிடம் தாரைவார்ப்பது ஆபத்தை விளைவிக்கும். காசு இருப்பவர்களுக்கு மட்டுமே தண்ணீர் என்ற நிலை வரும். மேலும், பொதுக் குழாய்கள் அகற்றப்பட்டால், எளிய மக்கள் பாதிப்படைவார்கள்" என்று சமூக ஆர்வலர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்று உறுதியாக உள்ளது. சூயஸ் தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோவை பகிர்ந்ததற்காக அப்துல் ரசாக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சூயஸ் பணி
சூயஸ் பணி

இந்நிலையில், தண்ணீரை தனியார்மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவையில் தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள், அமைப்புகள் வருகின்ற 27-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைத் தெரிந்துகொண்ட மாநகராட்சி நிர்வாகம் இந்தத் திட்டம் தொடர்பான விளக்கத்தை, முழுப்பக்க விளம்பரமாக மாலை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. அதில், ``இந்த ஒப்பந்தத்தில் மாநகராட்சி உரிமைகள் தனியாருக்கு வழங்கவில்லை.

மாநகராட்சி விளம்பரம்
மாநகராட்சி விளம்பரம்

இந்தத் திட்டம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் செயல்படுத்தப்படும். குடிநீர் விநியோக உரிமை நீராதாரங்கள் முதல் குடிநீர் இணைப்புவரை மாநகராட்சி வசமே தொடரும்" என்று கூறப்பட்டுள்ளது.