Published:Updated:

கோவையில் மீண்டும் ஹாட்பாக்ஸ்... முந்திய செந்தில் பாலாஜி - அதிர்ச்சியில் வேலுமணி!

கோவை ஹாட்பாக்ஸ் பரிசு

கோவை தேர்தல் ரேஸில் எப்போதும் அதிமுக-தான் முன்னிலை வகிக்கும். ஆனால், இந்த முறை திமுக-தான் முதலில் தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறது.

கோவையில் மீண்டும் ஹாட்பாக்ஸ்... முந்திய செந்தில் பாலாஜி - அதிர்ச்சியில் வேலுமணி!

கோவை தேர்தல் ரேஸில் எப்போதும் அதிமுக-தான் முன்னிலை வகிக்கும். ஆனால், இந்த முறை திமுக-தான் முதலில் தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
கோவை ஹாட்பாக்ஸ் பரிசு

தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின்போதும் கோவை தனி கவனம் பெறும். 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கோவை மாவட்டத்தை ஸ்வீப் அடிக்க, 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை ஃபார்முலா பேசுபொருளானது.

கோவை
கோவை

ஹாட்பாக்ஸ், வெள்ளிக் கொலுசு, பணம் என்று பரிசுமழை கொட்டியது. இந்த நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டன.

கோவை தேர்தல் ரேஸில் எப்போதும் அதிமுக-தான் முன்னிலை வகிக்கும். ஆனால், இந்த முறை திமுக-தான் முதலில் தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவுப்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டியை உருவாக்கும் பணியை திமுக தொடங்கியிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அதன்படி 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளில் திமுக தீவிரம் காட்டிவருகிறது.

இந்த நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. பெண் வாக்காளர்களைக் கவரும்விதமாகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்டம் முழுவதும் பூத்வாரியாக 3,069 இடங்களில் போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திமுக பூத்வாரியாக ஹாட்பாக்ஸுகளை இறக்கியிருப்பது அதிமுக-வை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

இதையடுத்து,அதிமுக-வினரும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொடங்கவிருக்கின்றனர். சமீபத்தில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “எப்பவும் நாமதான் தேர்தல் வேலையை முதல்ல தொடங்குவோம். இப்ப அவங்க பூத் கமிட்டி அமைக்கத் தொடங்கியிருக்காங்க.

வேலுமணி
வேலுமணி

அவங்களால முழுசா எல்லாம் பூத் கமிட்டி போடவே முடியாது. நாமதான் இங்க பெரிய கட்சி. வீதிக்கு ரெண்டு பேர் அடிப்படையில பூத் கமிட்டிக்கு 18 பேரை நியமிக்கணும். உடனடியா இந்த வேலையைத் தொடங்குங்க” என்று உத்தரவு போட்டிருக்கிறார்.