Published:Updated:

அதிமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து ஸ்கெட்ச் போடும் திமுக! - பரபரக்கும் கோவை அரசியல்

நாகராஜ் - ஸ்டாலின் - செந்தில் பாலாஜி
News
நாகராஜ் - ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகுமே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு செல்லாமல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்தார். விளைவு அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வந்த, கோவை மாவட்ட அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆழமாக கால் பதிக்க தொடங்கிவிட்டார். கோவை வந்தவுடனேயே, அதிமுகவில் அதிருப்தியாக உள்ள முன்னாள்களை இழுப்பதற்காக பேச்சுவார்த்தையை செந்தில் பாலாஜி தொடங்கிவிட்டார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன்படி, கோவை அதிமுக முன்னாள் எம்.பி நாகராஜ், முதல் விக்கெட்டாக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சசிகலாவின் அதி தீவிர விசுவாசியாக இருந்த நாகராஜ், 2014-2019 கோவை எம்.பியாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகுமே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு செல்லாமல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்தார். விளைவு அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

நாகராஜ் ஸ்டாலின் செந்தில் பாலாஜி
நாகராஜ் ஸ்டாலின் செந்தில் பாலாஜி

சசிகலாவின் அரசியலும் நிலை இல்லாததால் நாகராஜ் அரசியலில் இருந்தே விலகி இருந்தார். இதை புரிந்து கொண்ட செந்தில் பாலாஜி, நாகராஜிடம் காய் நகர்த்தி திமுக பக்கம் இழுத்துவிட்டார். இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிட்டிங் எம்எல்ஏகளை இழுத்தால் வெயிட்டாக இருக்கும் ஒருபக்கம் அதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆனால், இருக்கும் பதவியை விட்டுவிட்டு வர எம்எல்ஏக்கள் தயாராக இல்லை. ‘அதைவிட பெருசா ஏதாவது சொல்லுங்க.. யோசிக்கலாம்.’ என டீலிங் பேசுகின்றனர்.

கோவை
கோவை

இதனால், செந்தில் பாலாஜியின் கவனம் மாஜிகள் பக்கம் சென்றது. நாகராஜை இழுத்த அதே வேகத்தில் மேலும் சில மாஜிக்களை இழுக்க திட்டமிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் முதன்மையாக இருப்பவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி.

இரண்டு முறை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஆறுக்குட்டிக்கு, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், தேர்தல் காலகட்டத்தில் இருந்தே அவர் அமைதியோ அமைதி நிலைக்கு சென்றுவிட்டார். அவரை திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

ஆறுக்குட்டி
ஆறுக்குட்டி

ஆனால், ஆறுக்குட்டி இரட்டை நிலைப்பாட்டில் உள்ளாராம். அதிமுகவில் கிட்டத்தட்ட அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது. அதேநேரத்தில் திமுகவில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு தகுந்த போஸ்டிங் வேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம்.

இதற்கு நடுவே திமுகவில் இருந்து தனக்கு வரும் அழைப்பை வைத்து, அதிமுகவிலும் கல் வீசி வருகிறார். எங்கிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கிறதோ, அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

செ.ம வேலுசாமி
செ.ம வேலுசாமி

அதேபோல, முன்னாள் அமைச்சர், மேயர் செ.ம வேலுசாமியிடம் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். "வந்தா.. ராஜாவாதான் வருவேன்.” என அவர் மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பதால், திமுக தரப்பு யோசிக்கிறது.

மேலும் அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவிய முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை, முன்னாள் எம்பி சுகுமார் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். யூனியன் கவுன்சிலர்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து, இந்தப் பட்டியலில்தான் அடுத்த விக்கெட் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கோவை
கோவை

அதிமுக சீனியர்களின் அடுத்தடுத்த வருகையை, உள்ளூர் உடன்பிறப்புகள் ஏற்கவில்லை. “காலம் காலமா நாங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். திமுக இப்ப ஆளுங்கட்சியான உடனே பதவிக்காக இங்க வராங்க. அதை எப்படி ஏத்துக்க முடியும்?” என்று ஆதங்கப்படுகின்றனர்.

மறுபக்கம் அதிமுகவிலோ, “அங்கயே (திமுக) பதவி, பணத்துக்காக நிறைய பேர் எதிர்பார்த்து இருக்காங்க. நீங்க போன உடனே எல்லாம் பதவி கொடுத்து கௌரவபடுத்த மாட்டாங்க. ஒரு நாள் மாப்பிளைதான்.

வேலுமணி
வேலுமணி

மத்தபடி பத்தோட பதினொன்னா தான் நிக்கணும். அதுக்கு இங்கயே இருங்க. உங்களுககு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும்” என்று கூறி வருகின்றனர்.