Published:Updated:

கோவை: வெடிக்கும் போஸ்டர் விவகாரம்... நள்ளிரவில் குவிந்த திமுக, பாஜக-வினர்!

கோவை போஸ்டர் மோதல்

கோவை போஸ்டர் விவகாரத்தில் திமுக, பாஜக இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

கோவை: வெடிக்கும் போஸ்டர் விவகாரம்... நள்ளிரவில் குவிந்த திமுக, பாஜக-வினர்!

கோவை போஸ்டர் விவகாரத்தில் திமுக, பாஜக இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
கோவை போஸ்டர் மோதல்

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக போஸ்டர் கலாசாரம் அதிகரித்துவருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்களை ஒட்டிவந்தனர். இதையடுத்து, 'பொது இடங்களில் போஸ்டர் ஒட்டக் கூடாது.

கோவை திமுக போஸ்டர்
கோவை திமுக போஸ்டர்

மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்தது. அதன் பிறகும்கூட அரசியல் கட்சிகள் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டுவதை நிறுத்தவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முக்கியமாக திமுக தரப்பில் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மெகா சைஸ் பேனர் அளவில் போஸ்டர்களை ஒட்டி வந்தனர். போஸ்டர் ஒட்டக் கூடாது என்ற உத்தரவில் அரசியல் கட்சிகளுக்கு 10 நாள்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

பா.ஜ.கவினர்
பா.ஜ.கவினர்

ஆனாலும், திமுக தரப்பில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நேற்று முன்தினம் அவிநாசி சாலையில் பா.ஜ.க-வினர் போஸ்டர் ஒட்ட முயன்றனர்.

அப்போது அங்கு ஏராளமான திமுக-வினர் கூடினர். தொடர்ந்து பாஜக-வினரும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ``மாவட்ட நிர்வாகம் திமுக-வுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாங்களே போஸ்டர்களைக் கிழிப்போம்” என பா.ஜ.க-வினர் கூறினர்.

போலீஸ்
போலீஸ்

இதையடுத்து, நேற்று இரவு 10 மணிக்கு மேல் அவிநாசி சாலையில் ஏராளமான பா.ஜ.க-வினர் திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவிநாசி சாலை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

திமுக-வினரும் அவிநாசி சாலையில் கூடவே பதற்றம் அதிகரித்தது. தி.மு.க-வின் போஸ்டர்களை அகற்றச் சொல்லி, பா.ஜ.க-வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் தி.மு.க தரப்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பா.ஜ.க-வினர் கிழித்தனர்.

அப்போது பா.ஜ.க-வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜ.க-வினர் போஸ்டர்களைக் கிழித்த நிலையில், தி.மு.க-வினர் புதிய போஸ்டர்களை ஒட்டினர். இதையடுத்து அவிநாசி சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.