Published:Updated:

''சசிகலா, தினகரன் இல்லாவிடில் கட்சி காணாமல் போய்விடும்!'' - அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி

ஆறுக்குட்டி

``ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மக்கள் தலைவர்களாகச் செயல்படவில்லை. எனவே, சசிகலா, தினகரன்தான் அதிமுக-வை வழிநடத்த வேண்டும்" என்று முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார்.

''சசிகலா, தினகரன் இல்லாவிடில் கட்சி காணாமல் போய்விடும்!'' - அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி

``ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மக்கள் தலைவர்களாகச் செயல்படவில்லை. எனவே, சசிகலா, தினகரன்தான் அதிமுக-வை வழிநடத்த வேண்டும்" என்று முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார்.

Published:Updated:
ஆறுக்குட்டி

தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுக-வில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக கோவை முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி நம்மிடம் கூறுகையில்,

சசிகலா
சசிகலா

``தற்போதைய அதிமுக தலைமையின் மீது உடன்பாடு இல்லாததால் சற்று விலகியிருந்தேன். அம்மா மறைவுக்குப் பிறகு சந்தித்த சட்டசபை, உள்ளாட்சி என அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியைத்தான் சந்தித்துள்ளோம்.

கரைவேட்டியுடன் வெளியில் நடக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் முடிந்தவரை செய்து பார்த்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. மக்கள் தலைவராகச் செயல்பட முடியவில்லை. மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

ஒன்றரைக் கோடி தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர். கட்சியைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒற்றைத் தலைமை இருந்தால்தான் நிலைமை மாறும்.

சசிகலாதான் கட்சித் தலைமையை ஏற்க வேண்டும். சசிகலா, தினகரனால்தான் கட்சியை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால் கட்சி காணாமல் போய்விடும்” என்றார்.

ஆறுக்குட்டி
ஆறுக்குட்டி

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் செய்தபோது முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தவர் ஆறுக்குட்டி. தற்போது சசிகலாவை இணைக்கும் முடிவுக்கும் அதே ஆறுக்குட்டி முதல் ஆளாக ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.