Published:Updated:

கோவை சம்பவம்: தமிழக அரசை விமர்சிக்கும் ஆளுநர் ரவியின் அணுகுமுறை சரியா?!

ஆளுநர் ரவி

``மக்களிடம்‌ பதட்டத்தை கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம்‌ என்ற பாஜக/ சங்பரிவாரத்தின் முயற்சி ‌ பிசுபிசுத்துவிட்டது. எனவே இப்போது வெட்கமற்ற முறையில்‌ ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக.” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கோவை சம்பவம்: தமிழக அரசை விமர்சிக்கும் ஆளுநர் ரவியின் அணுகுமுறை சரியா?!

``மக்களிடம்‌ பதட்டத்தை கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம்‌ என்ற பாஜக/ சங்பரிவாரத்தின் முயற்சி ‌ பிசுபிசுத்துவிட்டது. எனவே இப்போது வெட்கமற்ற முறையில்‌ ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக.” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Published:Updated:
ஆளுநர் ரவி

கோவை உக்கடம் பகுதியில் கடந்த வாரம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்நிலையில் 28-ம் தேதி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,  " நமது எதிராளிகளுக்கு நம் வளர்ச்சி பிடிக்கவில்லை. புல்வாமா, கல்வானில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கான பதிலடியை நாம் வலுவாக கொடுத்தோம். தீவிரவாதத்தால் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், இது தற்போது எடுபடாது. கோவையில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்கள் சார்ந்த பி.எஃப்.ஐ அமைப்பு தடை  செய்யப்பட்டவுடன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

இந்த தீவிரவாத சக்திகள் தனித்து செயல்படவில்லை. அவர்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய அமைப்புகள் இயங்குகிறது. தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் அனைத்து விசாரணை அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். கோவையை மையமாக வைத்து நீண்ட காலமாக தீவிரவாத செயல் திட்டங்கள் தீட்டப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக கண்காணிப்பில் இருந்தும் எங்கே நாம் தவறவிட்டோம்? நம்முடைய கண்காணிப்பு தோல்வி அடைந்து விட்டதா? இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு இராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.

பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது கவலையளிக்கிறது. கோவையில் நடந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களிலே இது தீவிரவாத தாக்குதல் என்பது தெரிந்து விட்டது.  இதை விரைவாக விசாரித்த தமிழ்நாடு காவல்துறையை பாராட்டும் அதேவேளையில், ஏன் சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து என்.ஐ.ஏ வுக்கு ஒப்படைக்கப்பட்டது? தமிழக காவல்துறை ஒரு கருவி தான்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

அவர்களால் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் ஏன் நான்கு நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள்? உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது. தீவிரவாதத்தை மென்மையாக அணுகக் கூடாது. இதற்கு மேல் இதில் அதிகமாக பேச விரும்பவில்லை" என்று பேசியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்து தமிழக அரசையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் நேரடியாக குற்றம்சாட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறுகையில், "கோவை சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் இது வெறும் சிலிண்டர் விபத்து அல்ல, அதற்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருக்கக்கூடும் என்பதை காவல்துறை உணர்ந்தது. அக். 24-ம் தேதி காலை என்.ஐ.ஏ அதிகாரிகள், மத்திய உளவுத்துறையின் அதிகாரிகள் ஆகியோர் மாநில காவல்துறையுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார்கள். 25-ம் தேதியே இந்த வழக்கு உபா சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

கோவை சம்பவம்: தமிழக அரசை விமர்சிக்கும் ஆளுநர் ரவியின் அணுகுமுறை சரியா?!

அன்று மாலையும் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதன்பின்னர்தான் வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு 26-ம் தேதி  மாற்றப்பட்டது. முபின் 2019-ம் ஆண்டே என்.ஐ.ஏ-வால் விசாரிக்கப்பட்டார். பின்னர் ஏன் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது என்ஐஏ-வுக்குதான் தெரியும், எங்களுக்கு தெரியாது. இந்த விவகாரத்தில் எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணைகளின் அனைத்திலும் என்.ஐ.ஏ-வும் உடன் இருந்தது. ஆளுநர் ஏன் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை" என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஒரு‌‌ தனித்த நிகழ்வை‌ காரணம் காட்டி, ஒட்டுமொத்த‌ மக்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. துரிதமான முறையில் விசாரணை‌‌ நடத்திய காவல்துறை‌ - துப்பு‌ துலக்கியுள்ளது. ஆனால், தொடக்‌கம் முதலே‌ விசாரணையை‌ சிதைக்கும்‌ விதத்தில்‌ பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

கே. பாலகிருஷ்ணன்
கே. பாலகிருஷ்ணன்

மக்களிடம்‌ பதட்டத்தை கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம்‌ என்ற பாஜக/ சங்பரிவாரத்தின் முயற்சி ‌ பிசுபிசுத்துவிட்டது. எனவே இப்போது வெட்கமற்ற முறையில்‌ ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக. அவரும் எத்தை தின்றால் பித்தம்‌ தெளியும்‌‌ என்று‌ பேசிக் கொண்டு இருக்கிறார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு‌ பொறுப்பற்று பேசுவது‌ அவர் பதவிக்கு அழகல்ல" என்று கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக உள்துறை உயரதிகாரிகளிடம் பேசினோம்... ``கோவை சம்பவம் நடைபெற்று, அந்த வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட இந்த இடைப்பட்ட 4 நாட்களும் பல கட்டமாகவும், பல கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக நிமிடத்துக்கு நிமிடம் தகவல்கள் என்.ஐ.ஏ-வுக்கு தெரிவிக்கப்பட்டது. அதாவது, விசாரணைக்கு தேவையான எல்லா அடிப்படைகளையும் தமிழ்நாடு காவல்துறை அமைத்து கொடுத்திருக்கிறது. அதனால்தான் இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக என்.ஐ.ஏ-வே ஒப்புக் கொண்டுள்ளது.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

அதேதான் ஆளுநரும் பேசி இருக்கிறார். ஆனால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும், என்.ஐ.ஏ-வுக்கு வழக்கு மாற்றும் முடிவை எடுக்க வேண்டியவர்கள் ஏன் நான்கு நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறுவது ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றும் திட்டம் இருந்தாலே அதுகுறித்து பலகட்ட ஆலோசனை நடத்தப்படும். அப்படி இருக்கும்போது, இதை தாமதம் என்பதே தவறு.

என்.ஐ.ஏ (NIA)
என்.ஐ.ஏ (NIA)

அதே நேரத்தில் 2021 டிச. 23-ம் தேதி டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த வெடி விபத்து அடுத்த ஆண்டு ஜன.13-ம் தேதிதான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது என்.ஐ.ஏ. அதேபோல, மேற்கு வங்கத்தில் 2022-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு, நைஹாத்தியில் ஜனவரி 22-ம் தேதி ஒரு குண்டு வெடிப்பு, ஷிலாங்கில் ஜனவரி 30-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு, டோட்லாங்கில் மார்ச் மாதம் 18-ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு என என்.ஐ.ஏ விசாரித்த எல்லா வழக்குகளையும் தாமதாமாகதான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் தற்போது முதல் தகவல் அறிக்கையை என்.ஐ.ஏ பதிவு செய்திருக்கிறது. இதற்கு தமிழக அரசின் நடவடிக்கைதான் காரணமாகும்" என்றனர் அழுத்தமாக.