Published:Updated:

"வானதி ஊரில்தான் இருக்கிறாரா?" - பணிகளைப் பட்டியலிட்டு கோவை எம்.பி மீண்டும் கேள்வி

கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன்

``வானதி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடமை இருக்கிறது.” - பி.ஆர்.நடராஜன்.

"வானதி ஊரில்தான் இருக்கிறாரா?" - பணிகளைப் பட்டியலிட்டு கோவை எம்.பி மீண்டும் கேள்வி

``வானதி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடமை இருக்கிறது.” - பி.ஆர்.நடராஜன்.

Published:Updated:
கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன்

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ‘கோவையை, பாலக்காடு கோட்டத்திலிருந்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு
மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, வானதி சீனிவாசனும் அதற்கு பதில் அளித்திருந்தார். இந்நிலையில், வானதி சீனிவாசனுக்கு, நடராஜன் மீண்டும் ஒரு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் அவர், “தவற்றைச் சுட்டிக்காட்டிவிட்டோம் என்கிற ஆற்றாமையில், சரிசெய்துகொள்ள முயலாமல், என்னை சிறுமைப்படுத்த முயன்றிருக்கிறார். வானதி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடமை இருக்கிறது. கோவையில் ரயில்வே போராட்டக்குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்

கோவை ரயில்வே போராட்டக்குழு மற்றும் எனது தொடர் முயற்சியால் கோவை மாநகருக்கு எட்டு புதிய ரயில்கள் கிடைத்துள்ளன. அதேபோல் கோவை ரயில் நிலையம் வராமல் போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் சென்ற 13 ரயில்களில், ஒன்பது ரயில்கள் கோவை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலம் கோட்டத்தின் 45 சதவிகிதம் வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில் நிலையத்துக்கு ஆதர்ஷ் அந்தஸ்தும் பெற்றுத் தந்திருக்கிறோம். கோவை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எக்ஸலேட்டர் வசதி, குடிநீர் வசதி, நடைபாதைகள் மேம்பாடு என அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் என் முயற்சிகளை கோவை அறியும். வடகோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் கட்டடம்,

பி.ஆர்.நடராஜன்
பி.ஆர்.நடராஜன்

கோவை மற்றும் புறநகர்களில் 11 ரயில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைத்தது போன்ற பணிகளில் பங்காற்றியுள்ளேன். ஏழு ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் கோவைப் பகுதிக்கு ஒரு புதிய ரயிலைக்கூட விடவில்லை. இப்போது, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து எத்தனை ரயில்களைக் கொண்டுவந்தீர் எனக் கேட்பது அரசியல் சாமர்த்தியம்தானே!

தற்போது நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாஜக கட்சி எப்போது ஆட்சியில் ஏறியதோ அப்போதே ரயில்வே பட்ஜெட் என்ற ஒன்றை காலி செய்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா வானதி அவர்களே...

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இது போன்ற திசை திருப்பல் நடவடிக்கைகளால் பாஜக-வின் மக்கள் விரோதக் கொள்கைளை மறைக்க முடியாது. இதில் பிரதமர் மோடி கோவையின் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றிவிடுவார் என்று நாம் பதற்றப்படுவதாக வானதி கூறுவது வேடிக்கையானது.

இப்போதும் கோவையின் தொழில் அமைப்புகள் மற்றும் 180 மக்கள் அமைப்புகளுடன் இணைந்து, கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு தனி ரயில்வே கோட்டம் கோரி வருகிறோம். வானதி ஊரில்தான் இருக்கிறாரா... மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைக்கூட உங்கள் பாஜக அரசு இரண்டு வருடமாக நிறுத்திவிட்டது என்பதை அறிவீர்களா...

கோவை
கோவை

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் எழுப்பியதில் 10 பேரில் 7-வது இடத்தில் உள்ளேன். என் நாடாளுமன்ற வருகைப் பதிவில் 93 சதவிகிதம். மேலும் மேலும் தவறிழைப்பது அவரது பதற்றத்தைத்தான் காட்டுகிறதே தவிர மக்கள் மீதான அக்கறையை அல்ல” என்று சொல்லித் தனது பணிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism