Published:Updated:

``அறியாமையா.. அக்கறையின்மையா?” - வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

பி.ஆர். நடராஜன்

மத்திய ரயில்வே அமைச்சரிடம் அளித்த மனுவில், தவறான தகவல்களை குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை, எம்.பி பி.ஆர் நராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

``அறியாமையா.. அக்கறையின்மையா?” - வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

மத்திய ரயில்வே அமைச்சரிடம் அளித்த மனுவில், தவறான தகவல்களை குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை, எம்.பி பி.ஆர் நராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published:Updated:
பி.ஆர். நடராஜன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சினிவாசன், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். அதில், “கோவையை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்க வேண்டும்.” என வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு
மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், கோவை ஏற்கெனவே பாலக்காட்டில் இருந்து பிரிந்து சேலம் கோட்டத்தில் தான் உள்ளது. இதனால், வானதி சீனிவாசன் அறிக்கை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வானதி சீனிவாசன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்திப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. அந்த மனுவில் கோவையை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன் அறிக்கை
வானதி சீனிவாசன் அறிக்கை

பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவை தனியாக பிரிக்கப்பட்டு, சேலம் கோட்டத்தில் கடந்த 2006ம் ஆண்டே இணைக்கப்பட்டு விட்டது. இதற்காக பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் விளைவாகவே, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் சேலம் கோட்டத்தை உருவாக்கினார். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற ஊர்கள் மட்டுமே இன்னமும் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இருக்கின்றன. இவற்றையும் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம்.

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்

உண்மை நிலவரம் தெரியாமல் மனு அளித்திருப்பது, அவரின் அறியாமையை காட்டுகிறது. பிரச்னை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், இதுகுறித்து அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளாமல், மனு அளித்திருப்பது கோவைக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

இது அறியாமையா...அக்கறையின்மையா...விளம்பர எண்ணமா என்று தெரியவில்லை. இதுபோன்ற பொறுப்பில் உள்ளவர்கள் மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது, கூடுதல் பொறுப்புடன் இருப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism