Published:Updated:

கோவை மூதாட்டி விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவிய டி.எஸ்.ஆர்... மறுக்கும் போலீஸ்... நடந்தது என்ன?

கோவை மூதாட்டி

கோவை பேருந்தில் ஓசி தேவையில்லை எனக் கூறிய மூதாட்டி மீது வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என போலீஸ் விளக்கம் அளித்திருக்கிறது.

கோவை மூதாட்டி விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவிய டி.எஸ்.ஆர்... மறுக்கும் போலீஸ்... நடந்தது என்ன?

கோவை பேருந்தில் ஓசி தேவையில்லை எனக் கூறிய மூதாட்டி மீது வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என போலீஸ் விளக்கம் அளித்திருக்கிறது.

Published:Updated:
கோவை மூதாட்டி

மகளிருக்கு அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் குறித்து, அமைச்சர் பொன்முடி `ஓசி’ என்று கூறியிருந்தார். இதற்கிடையே, கோவை மதுக்கரை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு துளசியம்மாள் என்கிற மூதாட்டி ஒரு பேருந்தில் ஏறினார்.

கோவை அதிமுக கூட்டத்தில் மூதாட்டி
கோவை அதிமுக கூட்டத்தில் மூதாட்டி

நடத்துனர் இலவசப் பயணத்துக்கான சீட்டைக் கொடுத்தபோது அதை வாங்காமல், ``எனக்கு ஓசி தேவையில்லை” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையே, அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியைத் தூண்டி, வீடியோ எடுத்து அதைத் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பியதாக திமுக-வினர் புகார் கூறினர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் துளசியம்மாள் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

சமூகவலைதளங்களில் பரவும் டி.எஸ்.ஆர்
சமூகவலைதளங்களில் பரவும் டி.எஸ்.ஆர்

இதையடுத்து பிரித்திவிராஜ், மதிவாணன், விஜயானந்த், துளசியம்மாள் ஆகியோர் மீது மதுக்கரை போலீஸார் வழக்கு பதிவுசெய்ததாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் டி.எஸ்.ஆர் காப்பி ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனக் காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி பத்ரிநாராயணன், ``மூதாட்டிமீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது.

எஸ்.பி பத்ரி நாராயணன்
எஸ்.பி பத்ரி நாராயணன்

மதுக்கரை காவல் நிலையம் உட்பட கோவை மாவட்டத்தில் எங்கும் அவர்மீது வழக்கு பதியவில்லை. சமூக வலைதளங்களில் பொய்யாகப் பரவும் தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.