Published:Updated:

``கோவையின் தேவைக்கேற்ப திமுக அரசு செயல்படுவதில்லை!" - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
News
வானதி சீனிவாசன்

``பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருக்கிறது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க குறைக்கவில்லை." - வானதி சீனிவாசன்.

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``வளர்ந்த நாடுகளைப்போல இந்தியாவில் பெண்களின் பாலின விகிதம் அதிகரித்திருக்கிறது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெண் குழந்தைகளைப் பற்றிய பார்வை மாறத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் அதற்கு முக்கியக் காரணம். பிரதமர் மோடி, பெண்கள் நலனை முன்னிறுத்தி எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்குக் கிடைத்த பலன் இது.

என் தொகுதியில் சாலை பராமரிப்புப் பணிகள், புதிதாகச் சாலை அமைத்தல், தெருவிளக்கு, குப்பை போன்ற பிரச்னைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. மாநில முதல்வரே இங்கு வந்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதை வரவேற்கிறோம். ஒருசில பகுதிகளில் நான்கு நாள்கள் முதல் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் குப்பையை அள்ளுகின்றனர்.

கோவை
கோவை

இதனால், கோவையில் எங்கு பார்த்தாலும் குப்பையாக இருக்கிறது. முந்தைய அரசாங்கத்தில் சாலை போடுவதற்காக விடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. எதுவுமே செய்யாததால் நிலைமை மோசமாக இருக்கிறது. கோவையின் தேவைக்கேற்ப அரசாங்கம் செயல்படுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருக்கிறது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க குறைக்கவில்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறோம்.

பெட்ரோல் டீசல்
பெட்ரோல் டீசல்

தமிழக அரசு அங்கன்வாடி பணியில், விதவைகள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்திருக்கிறது. இதுபோல, தமிழக அரசு கொண்டுவரும் சிறப்பான திட்டங்களை, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வோம். அதேபோல, மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சிறப்பான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கும் கொண்டுவரப்படும்" என்றார்.