Published:Updated:

தனியார்மயம், அதிக கட்டணம்... `கோவை - ஷீர்டி தனியார் ரயிலை அரசே இயக்க வேண்டும்' - வலுக்கும் கோரிக்கை

கோவை - ஷீர்டி தனியார் ரயில்

முதற்கட்டமாக பாரத் கௌரவ் திட்டத்தின்படி, சாய்பாபா வாழ்ந்த இடமாக கருதப்படும் ஷீர்டிக்குத் தமிழ்நாட்டின் கோவை உட்பட இந்தியாவின் ஐந்து பெருநகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்க ரயில்வேதுறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

தனியார்மயம், அதிக கட்டணம்... `கோவை - ஷீர்டி தனியார் ரயிலை அரசே இயக்க வேண்டும்' - வலுக்கும் கோரிக்கை

முதற்கட்டமாக பாரத் கௌரவ் திட்டத்தின்படி, சாய்பாபா வாழ்ந்த இடமாக கருதப்படும் ஷீர்டிக்குத் தமிழ்நாட்டின் கோவை உட்பட இந்தியாவின் ஐந்து பெருநகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்க ரயில்வேதுறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

Published:Updated:
கோவை - ஷீர்டி தனியார் ரயில்

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே வலையமைப்பையும், மிக அதிகமான பணியாளர்கள், பயணிகளையும் தன்னகத்தேகொண்டது இந்தியன் ரயில்வே. நாட்டின் மிகப்பெரிய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயின் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களை `பாரத் கௌரவ்' எனும் திட்டத்தின் மூலம் தனியார்வசம் ஒப்படைக்க முடிவெடுத்தது மத்திய பா.ஜ.க அரசு. முதற்கட்டமாக பாரத் கௌரவ் திட்டத்தின்படி, சாய்பாபா வாழ்ந்த இடமாகக் கருதப்படும் ஷீர்டிக்குத் தமிழ்நாட்டின் கோவை உட்பட இந்தியாவின் ஐந்து பெருநகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்க ரயில்வேதுறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே

அந்த வகையில், கோவையைச் சேர்ந்த `எம்.என்.சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்' என்ற தனியார் நிறுவனம் கோவை - ஷீர்டிக்கு இடையில் ரயில் இயக்கும் உரிமத்தைப் பெற்றது. சரியாக கடந்த ஜூன் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு, நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை கோவை - ஷீர்டிக்கு இயக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஒருபுறம் ஆன்மிகவாதிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், அதிகமான கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நிலையில், சி.பி.ஐ.எம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ``முதல் பயணத்திலே பக்தர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம். உங்களுக்கு இருப்பது ஆன்மிகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல… தனியார் பக்தி மட்டும்தான். ரயில்வே நிர்வாகமே உத்தரவைத் திரும்பப்பெறு. ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க..." எனக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

தொடர்ந்து, தனியார் ரயில்வே கட்டணம் குறித்து கண்டன விளக்க அறிக்கையும் வெளியிட்டார். அதில், கோவையிலிருந்து ஷீர்டிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாய். ஆனால் அவர்கள் வசூலிப்பது 2,500 ரூபாய் .மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 2,360. தனியார் கட்டணம் ரூபாய் 5,000. குளிர்சாதன இரண்டடுக்குப் படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய். ஆனால் தனியார் கட்டணம் 7,000 ரூபாய். குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 8,190. தனியார் கட்டணம் 10,000 ரூபாய். அதாவது ஸ்லீப்பர் கட்டணம் இரண்டு மடங்கு. குளிர்சாதனப் படுக்கை, மூன்றடுக்கு, இரண்டடுக்கு ஆகியவை ஒன்றரை மடங்கு அதிகம். முதல் வகுப்பு ஒண்ணே கால் மடங்கு. கட்டணக் கொள்ளை" எனத் தெரிவித்தார்.

கோவை-ஷீர்டி
கோவை-ஷீர்டி

மேலும், ``தனியாருக்கு உரிமைக் கட்டணம் முன்பு ரூ.40 லட்சம் என்று தீர்மானித்து, பின்னர் அதிலும் பதினோரு லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா... நாங்கள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக் கூடாது என்று வலியுறுத்திவருகிறோம் . ரயில்வே அமைச்சர் அண்மையில் சென்னைக்கு வந்தபோது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அடித்துச் சொன்னார். ஆனால் அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்திலிருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் ரயில் என்றால் ஒரு கட்டணச் சலுகையும் கிடையாது. ஏன் முதியோர் கட்டணச் சலுகையும் கிடையாது. அது மட்டுமல்ல, ரயில்வேயைப்போல ஒன்றரை மடங்கு முதல் 2 மடங்கு வரை கட்டணம் உயர்வு. இதுதான் தனியார்மயம். இந்த வண்டியில் டிக்கெட் பரிசோதகர்கள், தனியார் பரிசோதகர்கள். தனியார் வண்டி. ஆனால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து லாபம் வரும் பயணி வண்டிகளும் தனியாருக்கு 2031-க்குள் தாரை வார்க்கப்படும். அனைத்து சரக்கு ரயில்களும் 2031-க்குள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். தனியாருக்குத் தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும் , சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டுதான் ஷீர்டி ரயில்" எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே

அதேபோல, பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயையும் ஒட்டுமொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான தொடக்கப்புள்ளிதான் இது. உடனடியாக இதை தடுத்துநிறுத்த வேண்டும் என தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தென்னக ரயில்வே தொழிலாளர்கள், டி.ஆர்.இ.யூ, எஸ்.ஆர்.எம்.யூ உள்ளிட்ட ரயில்வே தொழிலாளர் யூனியன்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டன.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்த நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``கோவை - ஷீர்டி இடையே தொடங்கப்பட்டுள்ள தனியார் ரயில் சேவை, பொதுத்துறைக்கும், மக்களுக்கும் எதிராக இருப்பதால் இதை தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிற்சாலைகள், ஆன்மிகத் தலங்களை இணைக்க ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

இதில், தனியார் சேவையை அனுமதிப்பதால் இந்திய ரயில்வேயின் பங்கு பறிக்கப்படுவதாக அமையும். இந்த ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம், ரயில் சேவையை இயக்கும் தனியாருக்கு மட்டுமே லாபம். எனவே, தனியாருக்கு விடப்பட்ட கோவை-ஷீர்டி ரயில் சேவையை உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும்விதமாக இந்தியன் ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism