Published:Updated:

``ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவை இரானுடன் ஒப்பிடுவதா?" - அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

``இந்தியாவை இரானுடன் ஒப்பிடுவது தவறானது. ஏனெனில், நாம் மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் கொண்டிருக்கிறோம். ஆனால், இரான் அப்படியல்ல." - அசாதுதீன் ஒவைசி

Published:Updated:

``ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவை இரானுடன் ஒப்பிடுவதா?" - அசாதுதீன் ஒவைசி

``இந்தியாவை இரானுடன் ஒப்பிடுவது தவறானது. ஏனெனில், நாம் மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் கொண்டிருக்கிறோம். ஆனால், இரான் அப்படியல்ல." - அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

கர்நாடகாவின் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடைவிதித்த மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது. இதற்கிடையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, `ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்' என்றும், சுதான்ஷு துலியா, `ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது' என்றும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது பேசுபொருளானது.

ஹிஜாப்
ஹிஜாப்

இதையடுத்து கர்நாடக மாநில கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ், ``உலகம் முழுவதுமே பெண்கள் ஹிஜாப் மற்றும் புர்காவை அணிய வேண்டாம் என்று கோரிக்கைவிடுக்கின்றனர்" எனக் கருத்து தெரிவித்திருந்தார். இந்தியாவில் ஹிஜாப் தொடர்பாக இத்தகைய மாறுபட்ட விவாதங்கள் அரங்கேறும் இதேவேளையில், இரானில் ஹிஜாபுக்கெதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், `ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவை இரானுடன் ஒப்பிடுவது தவறு’ என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியிருக்கிறார்.

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

இது தொடர்பாக நேற்று பேசிய ஒவைசி, ``இந்தியாவை இரானுடன் ஒப்பிடுவது தவறானது. ஏனெனில், நாம் மதச்சார்பற்ற அரசியலமைப்பைக்கொண்டிருக்கிறோம். ஆனால், இரான் அப்படியல்ல. அதோடு, கலாசார உரிமை, தனியுரிமை என்பது இரானில் அடிப்படை உரிமை அல்ல. இதுவே, இந்தியாவில் அப்படியில்லை. எனவே, ஹிஜாப் வேண்டும் அல்லது வேண்டாம் என்பது அவர்களின் விருப்பம், அவர்களுடன் நான் ஒற்றுமையாக நிற்கிறேன். அதுமட்டுமல்லாமல், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹிஜாப் அணிந்த பெண்மணிக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதும், ஏதோ ஒன்றை உணர்த்துகிறது. மேலும், இரானில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்திய அரசின் கருத்து என்ன என்பது தெரிய வேண்டும்" என்று கூறினார்.