Published:Updated:

மதுபோதையில் குருத்வாராவில் நுழைந்தாரா பஞ்சாப் முதல்வர்?! - பகவந்த் மான் மீது பாஜக புகார்

பகவந்த் மான்

பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் குடிபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதையொட்டி பாஜக-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அவர்மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஷிரோமணி குருத்வாரா பர்பந்த கமிட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் குடிபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. பைசாகி என்பது பஞ்சாப் மற்றும் சீக்கிய மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அது கடந்த ஏபரல் 14-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தச் சம்பவம் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்த கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாஜக இளைஞரணி தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா (Tajinder Pal Singh Bagga) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``குடிபோதையில் குருத்வாரா தம்தாமா சாஹிப்புக்குள் நுழைந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். பகவத் மான் பஞ்சாப் முதலமைச்சரான பிறகு இவரின் மீது முதல் முறையாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism