Published:Updated:

`பிரதமர் வருகையில் எங்களைப் புறக்கணிக்கிறார்கள்!' - தகிக்கும் தமிழிசை ஆதரவாளர்கள்

ஐ.ஐ.டி விழாவில் கலந்துகொள்ள மோடி வந்தபோது, தமிழிசை ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாம். அதேபோன்று இந்தமுறை பொன்னார் தரப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

Modi
Modi

இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசும் இன்ஃபார்மல் மீட்டிங் இன்று மற்றும் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தச் சந்திப்பு தற்போது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Modi, Xi Jinping
Modi, Xi Jinping

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர், தமிழக பா.ஜ.க தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படவில்லை. அந்த இடத்துக்கு பல பெயர்கள் லிஸ்டில் இருந்தாலும் மேலிடம் எந்த முடிவுக்கும் வரவில்லை. மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் தமிழக பா.ஜ.க-வில் கோஷ்டி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க-வில் பல கோஷ்டிகள் இருந்தாலும், கடந்த முறை ஐ.ஐ.டி விழாவில் கலந்துகொள்ள மோடி வந்தபோது, தமிழிசை ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாம். அதேபோன்று இந்தமுறை பொன்னார் தரப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

Modi in IIT
Modi in IIT
ANI

இந்நிலையில், மோடியின் சென்னை வருகையின்போது தமிழிசை ஆதரவாளர்களை ஓரம்கட்டும் பணிகள் நடந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரன், பி.டி அரசகுமார், எம்.என் ராஜா, வினோத் செல்வம், பிரசாத், சக்ரவர்த்தி, ஜெய்சங்கர், காளிதாஸ் என ஓரங்கட்டப்படுபவர்களின் பட்டியல் நீள்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க-வினர், ``கடந்த முறை மோடி வந்தபோது ஏற்பாட்டுப் பணிகளை சிறப்பாகச் செய்துகொடுத்தோம். ஆனால், இந்தமுறை அந்த வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை.

இதைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்த்தரப்பு, எங்களை முழுமையாக ஓரங்கட்டும் பணிகளைச் செய்து வருகிறது. எந்த நிலையிலும் மோடியிடம் நாங்கள் நெருங்கிவிடாதபடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பிரதமருக்கு அருகே செல்லும் பட்டியலில் எங்கள் தரப்பில் இருந்து யாரும் இல்லை. அதாவது, தமிழிசை தெலங்கானாவில் பதவியேற்றபோது தமிழகத்திலிருந்து சென்ற பா.ஜ.க-வினரின் பட்டியலை எடுத்து வைத்து இந்த நிகழ்வில் குறிப்பிட்ட நபர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க அலுவலகம்
பா.ஜ.க அலுவலகம்

எதிர்த்தரப்பில் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட பிரமுகர் ஒருவர் மோடியைச் சந்திக்கும் புரோட்டோகாலில் இடம் பெற்றுள்ளாராம். இதுபோன்று இன்னும் சில விஷயங்களை இணைத்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றார்.