Published:Updated:

QR Code: `குறைகளைத் தெரிவிக்க ஸ்கேன் செய்யுங்க மக்களே...' - சொல்கிறார் திருச்சி மாநகராட்சி ஆணையர்

QR கோடு மூலம் புகாரளிக்கலாம்

``இந்த முயற்சியை 65 வார்டுகளிலும் செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்'' - திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன்

Published:Updated:

QR Code: `குறைகளைத் தெரிவிக்க ஸ்கேன் செய்யுங்க மக்களே...' - சொல்கிறார் திருச்சி மாநகராட்சி ஆணையர்

``இந்த முயற்சியை 65 வார்டுகளிலும் செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்'' - திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன்

QR கோடு மூலம் புகாரளிக்கலாம்

1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான் அணு ஆயுத சோதனையைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் மே மாதம் 11-ம் தேதி, நம் நாட்டில் தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களில், அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளில் தொழில்நுட்பம் அதிகப்படியான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. மக்கள் தங்கள் குறைகளை உடனடியாகத் தீர்த்துக்கொள்ள, தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது. 

இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக, திருச்சியில் சமீபத்தில் QR கோடு குறைதீர் செயல்முறைகள் சோதனையின் அடிப்படையில், குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் செயல்பாடு குறித்தும், மக்களிடம் இந்தத் திட்டத்தின் வரவேற்பு குறித்தும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்தியநாதனிடம் பேசியபோது, "QR கோடு செயல்முறையை நாங்கள் மூன்று விதமாகப் பிரித்து, நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறோம்.

QR கோடு மூலம் புகாரளிக்கலாம்
QR கோடு மூலம் புகாரளிக்கலாம்

முதலாவதாகப் பொது கழிப்பறைகளில் QR கோடு பொருத்துவது, இதில் அதிகபட்சம் எங்களுக்கு வருவது 5-6 வகை புகார்கள்தான். கழிப்பறை சுத்தம் குறித்தும், அதன் பராமரிப்பு குறித்தும்தான் பெரும்பாலான புகார்கள் வரும். சில சமயங்களில் பாசிட்டிவ் ஆன விஷயங்களையும் மக்கள் பதிவுசெய்வதுண்டு. இரண்டாவதாக, பொது மற்றும் தனியார் வளாகங்களில் QR கோடு மூலம் குறைதீர்க்கும் முயற்சி. 22-வது வார்டிலுள்ள எல்லா வீட்டிலும் QR கோடு ஸ்டிக்கரை ஒட்டிவிடுவோம். அந்த QR கோடை ஸ்கேன் செய்து மக்கள் அவர்களுடைய குறைகளையும், புகார்களையும் பதிவுசெய்யலாம்.

இது டெஸ்டிங் ஸ்டேஜில்தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்துவமான கோடுகள் இருப்பதால், அந்த வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே குறைகளைப் பதிவுசெய்ய முடியும். இதன் மூலம் தேவையற்ற, உண்மையில்லாத புகார்களைச் சுலபமாக நீக்க முடிகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``மூன்றாவதாக, 63-வது வார்டில் திடக்கழிவு மேலாண்மையில் QR கோடு நடைமுறையைச் செயல்படுத்தியிருக்கிறோம். தூய்மைப் பணியாளர்கள் ஒரு வீட்டில் குப்பையை அகற்றிய பிறகு, ஒருங்கிணைக்கப்பட்ட டேட்டாபேஸில் பதிவுசெய்யப்படும். குப்பைகள் அகற்றப்படவில்லையென்றால், ஏன் அகற்றப்படவில்லை என்று கண்காணிக்கப்படும்.

QR கோடு மூலம் புகாரளிக்கலாம்
QR கோடு மூலம் புகாரளிக்கலாம்

மேலும், அந்தக் குப்பைகள் வீடுகளிலே மக்கும் குப்பையாகவும், மக்காத குப்பையாகவும் அகற்றப்படவில்லையென்றால், அதுவும் QR கோடு மூலமாகவே பதிவுசெய்யப்படும். அதன் பிறகு எங்களுடைய குழுக்களால் அவர்களுக்குக் குப்பைகளைப் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்படும். இந்த மூன்று செயல்பாடுகளையும் அடுத்தகட்டமாக 65 வார்டுகளிலும் செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்" என்றார். 

திருச்சியில் அடுத்தகட்ட தொழில்நுட்பம் மூலமான குறைதீர் முயற்சிகள் குறித்துக் கேட்டபோது, "டெக்னாலஜி என்பது மக்களுக்கு அரசாங்கத்தை அணுக ஒரு வழிதான். ஆனால், டெக்னாலஜியை வைத்து கள வேலைகளைக் குறைக்க முடியாது. 

உதாரணத்துக்கு, நாங்க திருச்சியில் ஒரு சாஃப்ட்வேர் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். அதன் மூலமாக எல்லாப் புகார்களும் ஓரிடத்தில் பதிவுசெய்யப்பட்டு, பின்பு குறிப்பிட்ட அதிகாரிகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும். புகார்களுக்கு ஏற்றவாறு காலக்கெடு விதிக்கப்பட்டு, அதற்குள் சரிசெய்யப்படுகிறதா என்று சரிபார்க்கப்படும். உதாரணத்துக்கு, சாலை வசதி என்றால் அதிகபட்சம் மூன்று மாதம், தண்ணீர் பிரச்னை என்றால் 24 மணிநேரம், குப்பை அகற்ற வேண்டிய புகார்னா ஒரு மணி நேரம் அப்டினு டெட்லைன் வச்சிப்போம்" என்றார். 

QR கோடு மூலம் புகாரளிக்கலாம்
QR கோடு மூலம் புகாரளிக்கலாம்

இன்று நேரடியாக அலுவலகத்துக்குச் செல்லாமல் மக்கள் தங்களுக்கான தேவைகளை வீட்டிலிருந்தபடியே தொழில்நுட்பத்தின் மூலம் பூர்த்திசெய்யப் பல வழிமுறைகளை அரசாங்கம் எடுத்துவரும் நிலையில், திருச்சியில் இந்த முயற்சி, அரசு சேவைகளை உடனடியாக மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் பெரும் பங்களிப்பு வகிக்கிறது.