Published:Updated:

``பெங்களூரு கஞ்சா சிட்டியானது; 40% ஊழல்” - பாஜக-வைக் கண்டித்து 300 இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்.

`பெங்களூரில் ரோடுகளில் பள்ளம் ஏற்பட்டுவருகிறது. ‘பொத்தோல்’ ரோடுகளால் மக்கள் உயிரிழக்கின்றனர். ஊழலின் விளைவால் மெட்ரோ தூண் சாய்ந்து இரண்டரை வயது மகன், அவரின் தாய் பரிதாபமாக இறந்தனர்’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு.

``பெங்களூரு கஞ்சா சிட்டியானது; 40% ஊழல்” - பாஜக-வைக் கண்டித்து 300 இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

`பெங்களூரில் ரோடுகளில் பள்ளம் ஏற்பட்டுவருகிறது. ‘பொத்தோல்’ ரோடுகளால் மக்கள் உயிரிழக்கின்றனர். ஊழலின் விளைவால் மெட்ரோ தூண் சாய்ந்து இரண்டரை வயது மகன், அவரின் தாய் பரிதாபமாக இறந்தனர்’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு.

Published:Updated:
காங்கிரஸ் போராட்டம்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதன் மூலம் வாக்கு சேகரிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். பொது இடங்களில், பா.ஜ.க அரசின் ஊழல்கள் குறித்த பேனர்கள் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது எனப் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மெட்ரோ ஸ்டேஷன் அருகே போராட்டம்.
மெட்ரோ ஸ்டேஷன் அருகே போராட்டம்.

இந்த நிலையில், இன்று காலை, பெங்களூரு நகர் முழுவதிலும், 300 இடங்களில் பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதிப்போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். அதன்படி, இன்று காலை, 11:00 மணிக்கு எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா, மாநிலத்தலைவர் டி.கே சிவக்குமார் தலைமையில், முக்கிய சிக்னல்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் என, நகரின் முக்கியப் பகுதிகளில், பா.ஜ.க அரசுக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, காங்கிரஸ் கட்சியினர் அமைதிப் போராட்டம் நடத்தினர்.

‘கார்டன் சிட்டி – கஞ்சா சிட்டி’

சித்தராமையா, டி.கே சிவக்குமார் நிருபர்களிடம், ‘‘பா.ஜ.க அரசின் மோசமான ஆட்சியின் காரணமாக, சிலிக்கான் சிட்டியாக, கார்டன் சிட்டியாக இருந்த பெங்களூரு, தற்போது கஞ்சா சிட்டியாக மாறியிருக்கிறது. முன்பு வேலை தேடி பெங்களூர் வந்தவர்கள் தற்போது கஞ்சாவைத் தேடிவருகின்றனர்.

பெங்களூரு முழுதிலும் காங்கிரஸ் போராட்டம்.
பெங்களூரு முழுதிலும் காங்கிரஸ் போராட்டம்.

அனைத்து வளர்ச்சிப்பணிகளிலும் 40 சதவிகிதம் ஊழல் செய்வதால், பெங்களூரில் திரும்பிய திசையெல்லாம் புதிய ரோடுகளில் கூட பெரிய பள்ளம் ஏற்பட்டுவருகிறது. ‘பொத்தோல்’ ரோடுகளால் மக்கள் உயிரிழக்கின்றனர். ஊழலின் விளைவால் மெட்ரோ பணிக்கான தூண் சாய்ந்து இரண்டரை வயது மகன், அவரின் தாய் பரிதாபமாக இறந்தனர். பா.ஜ.க அரசால் இங்கு சிறப்பான உள்கட்டமைப்பு இல்லை, வளர்ச்சி இல்லை’’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மாறி மாறி ஊழல் புகார்களைத் தெரிவித்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது.