Published:Updated:

ரயில்கள் நிற்காததைக் கண்டித்து `மெகா அன்னதானம்’ - அரசின் கவனம் ஈர்க்க நூதன போராட்டம்!

`மெகா அன்னதானம்’

புதுக்கோட்டை அருகே கீரனூரில், ரயில் நிற்காததைக் கண்டித்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மெகா அன்னதானத்தை நடத்தியிருக்கிறது அறவழிக்குழு.

ரயில்கள் நிற்காததைக் கண்டித்து `மெகா அன்னதானம்’ - அரசின் கவனம் ஈர்க்க நூதன போராட்டம்!

புதுக்கோட்டை அருகே கீரனூரில், ரயில் நிற்காததைக் கண்டித்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மெகா அன்னதானத்தை நடத்தியிருக்கிறது அறவழிக்குழு.

Published:Updated:
`மெகா அன்னதானம்’

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதுமே பெரும் இழப்புகளை ஏற்படுத்திச் சென்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் குறையவே ரயில் சேவை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியது. ரயில் சேவை தொடங்கினாலும், சில நிறுத்தங்களில் ரயில் நிற்காமல் சென்று வந்தது. தற்போது, அந்தக் கட்டுப்பாடுகளும் தளர்ந்துவிட்டன. ஆனாலும், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் நிறுத்தத்தில் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் தற்போது நிற்காமல் சென்றுவருகின்றன.

அன்னதானம்
அன்னதானம்

இதனால், இப்பகுதி பயணிகள் சேவை மற்றும் வர்த்தக சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, கீரனூர் நிறுத்தத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி, இப்பகுதியைச் சேர்ந்த அறவழிக்குழு போராடிவருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழிக்குழு, கீரனூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிற்க வலியுறுத்தி, நூதன முறையில் அறுசுவை அன்னதானத்தை நடத்தி அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த அன்னதானத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உணவருந்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து, அறவழிக்குழுவினரிடம் கேட்டபோது, ``நாடு முழுவதுமே கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பேருந்து, ரயில் என வழக்கமான சேவைகள் அனைத்தும் இயங்கிக்கிட்டு இருக்கு. ஆனா, எங்க பகுதியில மட்டும் ரயில் சேவையை அதிகாரிகள் நிறுத்திவெச்சுருக்காங்க. கேள்வி கேட்டால், உரிய பதிலை அதிகாரிங்க சொல்ல மறுக்குறாங்க. கீரனூர்ல ரயிலை நிறுத்தவைக்க ஒரு வருஷத்துக்கும் மேலா அறவழியில போராடுறோம். ரயில்வேதுறைக்குக் கடிதம், துறையோட மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்கிட்ட மனுன்னு ஏகப்பட்ட அறவழிப்போராட்டங்கள் பண்ணிப் பார்த்துட்டோம்.

அன்னதானம்
அன்னதானம்

அவங்களோட கவனத்தை ஈர்க்க முடியலை. நீதிமன்றம், தாலுகா அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், நான்கு உயர்நிலைப்பள்ளிகள், வரலாற்று சிறப்புமிக்க சிவாலயம், தேவாலயம், பள்ளிவாசல் என இப்படிப் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட கீரனூர் பகுதிக்கு ஒரு ரயில்கூட நிற்காமல் செல்வது வேதனையளிக்கிறது. இந்த நிலையில்தான், அன்னதானம்கிற நூதன போராட்டத்துல ஈடுபட்டிருக்கோம். ரயில் கீரனூர் நிறுத்தத்துல நிற்கிற வரைக்கும் எங்களோட போராட்டம் தொடரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism