Published:Updated:

அடுத்த மோதல் ஆரம்பம்... கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ரவி மோதுவது ஏன்?

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்கிற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை ஆளுநர் ரவி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

அடுத்த மோதல் ஆரம்பம்... கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ரவி மோதுவது ஏன்?

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்கிற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை ஆளுநர் ரவி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.என்.ரவி பேசிவருகிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க உறுதியாக இருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தபோது, அதைத் தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியாக இருந்த தி.மு.க கடுமையாக விமர்சித்தது. ஆட்சிக்கு வந்த பிறகும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தி.மு.க கூறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் அதை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில், மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர், மாநில அரசின் கொள்கைக்கு எதிராகப் பேசிவருவது தொடர்ந்து சர்ச்சையாகிவருகிறது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கூட்டத்தை ஆளுநர் ரவி கூட்டினார். அப்போது, தமிழ்நாடு 20 பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதையும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதையும் அவர் பாராட்டினார். மேலும், உயர்கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக இருப்பதாகக் கூறிய ஆளுநர், கல்வித்திறன் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களைக் கேட்டுக்கொண்டார். துணைவேந்தர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களின் பலம், பலவீனம் பற்றித் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல திட்டங்கள் இருப்பதால், பல்கலைக்கழகங்களில் அதை அமல்படுத்த முன்வர வேண்டும் என்று துணைவேந்தர்களிடம் ஆளுநர் பேசியதாகவும் தகவல் வெளியானது. தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த பிறகு தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அவர் பேசியது அதுதான் முதன்முறை. மாநில அரசின் கொள்கைக்கு எதிராக அப்படி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை

அதன் பிறகு, தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அவர் அவ்வப்போது பேசிவருகிறார். ‘புதிய தேசிய கல்விக் கொள்கையால் முன்னேற்றப் பாதையில் நாடு வேகமாகச் செல்லும். கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாசாரம், பாரம்பர்யம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றை புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெக்க முடியும்’ என்றெல்லாம் ஆளுநர் ரவி பேசுகிறார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசிவரும் விவகாரம், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அவர் பேசியிருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா கடந்த மே 30-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பேசிய ஆளுநர் ரவி, “கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில் கலந்துகொண்டவர்கள் பல யோசனைகளைத் தெரிவித்தனர். தற்போது இருக்கும் கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். இதுவரை தேசத்தை நாம் பார்த்த பார்வை சற்று சரியாக இல்லை என்று சொல்ல வேண்டும். ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வுடன் கல்விக் கொள்கையை அணுகியிருக்கிறோம்” என்றார்.

மேலும், “புதிய தேசிய கல்விக் கொள்கை தொலைநோக்கு, மாற்றத்துக்கான கல்வியை நோக்கமாகக்கொண்டது. இது மாணவ, மாணவியருக்குக் கூடுதல் ஆற்றலையும் அறிவையும் வழங்கும். நமது கல்வியில் புதிய மாற்றங்களை முன்னெடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியில் மாற்றம் கொண்டுவருவதே இந்தியாவின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும். படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய தேசிய கல்விக் கொள்கையில் வாய்ப்பு உள்ளது.

 மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு புதிய தேசிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. முதலில் அந்தக் கொள்கை என்னவென்று அரசியல் தலைவர்கள் படிக்க வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. அதை முழுமையாகப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து, அதிலுள்ள சிறப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே அது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்” என்றார் ஆளுநர்.

அத்துடன் ஆளுநர் தன் பேச்சை நிறுத்திக்கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அமைச்சர் பொன்முடியிடம், “தயவுசெய்து தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்...” என்று ஆளுநர் கூறினார்.

ஆளுநர்  ரவி
ஆளுநர் ரவி

முதன்முறையாக துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியபோது, தேசிய கல்விக் கொள்கை குறித்து அவர் பேசிய கருத்துகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அப்படி ஆளுநர் பேசியிருக்கிறார் என்று வெறும் தகவலாகத்தான் வெளியானது. இப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் முகத்துக்கு நேராக வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதற்கு எதிராக தி.மு.க-வினர் சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளித்திருக்கிறார்கள். தி.மு.க அரசுடன் மோதல் போக்கைத் தொடரும் ஆளுநருக்கு மத்திய ஆட்சியாளர்களின் முழுமையான ஆதரவு இருக்கிறது. எனவே, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான தன் நிலைப்பாட்டை இன்னும் அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து அவர் முன்வைப்பார் என்றே தெரிகிறது. தமிழ்நாடு அரசு இதற்கெல்லாம் எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism