Published:Updated:

`வாக்காளர்களைக் காணச் சென்ற வேட்பாளரை பாஜக-வினர் வாள்களால் தாக்கினார்கள்!' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

குஜராத்தில், காங்கிரஸ் வேட்பாளர் காந்திபாய் காரடி என்பவர், தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் 150 பேருடன் வந்து வாள்களால் தன்னைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

`வாக்காளர்களைக் காணச் சென்ற வேட்பாளரை பாஜக-வினர் வாள்களால் தாக்கினார்கள்!' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

குஜராத்தில், காங்கிரஸ் வேட்பாளர் காந்திபாய் காரடி என்பவர், தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் 150 பேருடன் வந்து வாள்களால் தன்னைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
காங்கிரஸ் குற்றச்சாட்டு

2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், முக்கியமான சட்டப்பேரவைப் தேர்தலாகப் பார்க்கப்படும் குஜராத் தேர்தலில், 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``காங்கிரஸ் பழங்குடியினத் தலைவரும், டாண்டா சட்டமன்ற வேட்பாளருமான காந்திபாய் காரடி, பா.ஜ.க குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதையடுத்து அவரைக் காணவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்துக்கு கூடுதலாக துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் பயப்பட மாட்டோம், உறுதியாகப் போராடுவோம்" என நேற்று ட்வீட் செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது பா.ஜ.க-வினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காந்திபாய் காரடி, அதே தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தன்னைக் கொலைசெய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

காந்திபாய் காரடி - காங்கிரஸ் வேட்பாளர்
காந்திபாய் காரடி - காங்கிரஸ் வேட்பாளர்

இது தொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய காந்திபாய் காரடி, ``வாக்காளர்களைச் சந்திக்க காரில் சென்றுகொண்டிருந்தபோது, இரவு 9:30 மணியளவில் பா.ஜ.க வேட்பாளர், அவரின் ஆதரவாளர்கள் 150 பேர் எங்களை வழிமறித்தனர். நாங்கள் காரைத் திருப்பியபோது மறுபக்கத்திலிருந்து இன்னொரு கார் எங்களைத் தடுத்தது. அவர்கள் எங்களை வாள்களால் தாக்கத் தொடங்கினர். தப்பிக்க எண்ணிய நாங்கள், காரை அங்கேயே விட்டுவிட்டு 10-15 கி.மீ ஓடி ஒரு காட்டுக்குள் ஒளிந்துகொண்டோம். அதையடுத்து 3-4 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் என்னைக் கண்டுபிடித்தது" எனத் தெரிவித்தார்.

பாஜக
பாஜக

அதைத் தொடர்ந்து தற்போது இந்த விவகாரத்தில், பா.ஜ.க வேட்பாளர் லது பார்கி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பா.ஜ.க தரப்பிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டின் மீது எந்தவொரு பதிலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.