Published:Updated:

"ராகுலுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோற்றுவிட்டது!" - அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் ( ட்விட்டர் )

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திவருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

"ராகுலுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோற்றுவிட்டது!" - அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திவருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

Published:Updated:
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் ( ட்விட்டர் )

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. பல மாநிலங்களைக் கடந்து, கடந்த 24-ம் தேதி டெல்லியில் நுழைந்தது. இந்த யாத்திரையில், கட்சிக்கு அப்பால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
ட்விட்டர்

இந்த நிலையில், ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ``பாரத் ஜோடோ யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது. அதிகரிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், Z+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியைச் சுற்றி பாதுகாப்பு வீரர்கள் வருவதைப் பராமரிப்பதிலும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.

நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து செல்பவர்களும் பாதுகாப்பு சுற்றுச்சுவரை அமைக்கவேண்டியிருந்தது. மேலும், ஹரியானா மாநில உளவுப்பிரிவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பாரத் ஜோடோ யாத்திரையின் கன்டெய்னர்களுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பாக, ஹரியானா மாநிலம், குர்கானில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
ட்விட்டர்

யாத்திரையில் பங்கேற்றவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவின் எல்லை முழுவதும் செல்ல அரசியலமைப்பு உரிமை வழங்கியிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை என்பது நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கான யாத்திரை. எனவே, மத்திய பா.ஜ.க அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடக் கூடாது.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை

மேலும் காங்கிரஸ் தலைவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களை மறக்கக் கூடாது. இனி வரவிருக்கும் நாள்களில் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீருக்குள் நுழையும்போது ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.