Published:Updated:

``நீட் தேர்வுக்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் திமுக-வும்தான் காரணம்!"- எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

"நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம். நீட் என்ற சொல்லே அப்போதுதான் வந்தது" எனச் செய்தியாளர்கள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில், நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ``நீட் தேர்வை ரத்துசெய்வதற்குக் கடுமையான முயற்சி மேற்கொண்டோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடத்தவேண்டிய சூழ்நிலையில் அப்போது அ.தி.மு.க இருந்தது. இப்போதும் நீட் தேர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்று நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம். 2010-ல் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. `நீட்’ என்ற சொல்லே அப்போதுதான் வந்தது.

சிறப்பு கூட்டத்தொடருக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி
சிறப்பு கூட்டத்தொடருக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி

அப்போதே 2013-ல், அந்தந்த மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வை அமல்படுத்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின், மூன்று நீதிபதிகள்கொண்ட அமர்வில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைகிறார்கள், எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். இந்தத் தீர்ப்பு அப்படியே தொடர்ந்திருந்தால், இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில் குறிப்பிடவில்லை. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸால் மறுசீராய்வு மனு போடப்பட்டதன் விளைவாகத்தான், 2017-ல் நீட் தேர்வு வந்தது. இதையெல்லாம் தடுத்து நிறுத்தவேண்டிய அனைவரது ஒருமித்த கருத்தாக நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும். இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கு அதிமுக துணை நிற்கும்" என செய்தியாளர்கள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.