Published:Updated:

கொரோனா: `வென்டிலேட்டர்கள் எங்கே?’ -PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

PM CARES சர்ச்சை
PM CARES சர்ச்சை

மத்திய அரசு PM CARES நிதி மூலம் ஜூன் மாத முடிவுக்குள் 50,000 வென்டிலேட்டர்கள் அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில், 20,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே இதுவரை பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை, பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் உற்பத்தியான 60,000 வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என்றும், இதுவரை 2,923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் ஏற்கெனவே 1,340 வென்டிலேட்டர்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவிப்பு வெளியானது.

patient in bed
patient in bed

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழைமை காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் கௌரவ் வல்லப், PM CARES நிதியிலிருந்து ரூ . 2,000 கோடி செலவில் வென்டிலேட்டர்கள் வாங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இவை, ஜூன் 30 க்குள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டது. ஆனால், அதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், அந்த அறிவிப்பின் செயல் வடிவம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ஆர்டர் செய்த 50,000 வென்டிலேட்டர்களும் இதற்கு முன்பே மத்திய அரசின்மூலம் ஆர்டர் செய்யப்பட்ட 40,000 வென்டிலேட்டர்களும் தனித்தனியாக ஆர்டர் செய்யப்பட்டவைதானா? அதாவது, மத்திய அரசு சார்பில் 40,000 வென்டிலேட்டர்களும் பி.எம் கேர்ஸ் சார்பில் 50,000 வென்டிலேட்டர்களும் வழங்கப்படுமா என கௌரவ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், ஜூன் 23-ம் தேதி வரை 1,340 வென்டிலேட்டர்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளன. எனில், பி.எம் கேர்ஸ் நிதியில் செலுத்திய பணம் எங்கே போனது? தினசரி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வரும் நிலையில், வென்டிலேட்டார்கள் அளிப்பதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டுள்ளது ஏன்?

ventilator support for Covid-19 patients
ventilator support for Covid-19 patients

பி.எம் கேர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு வென்டிலேட்டரின் விலை 4,00,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வென்டிலேட்டர் தயாரிக்கும் அக்வா ஹெல்த் கேர் நிறுவனம், ஒரு வென்டிலேட்டரின் விலை 1,50,000 எனக் கூறியுள்ளது, 1,50,000 ரூபாய் விலை உள்ள வென்டிலேட்டரை அரசு 4,00,000 ரூபாய் விலைகொடுத்து வாங்குவது ஏன்? இந்த அதிகப்படியான பணம் யாருக்குச் செல்கிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பி.எம் கேர் சார்பில் வாங்கும் வென்டிலேட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், வெளிப்படையான டெண்டர் முறை அல்லது போட்டி ஏல செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவையா என்றும் கௌரவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு, பி.எம் கேர்ஸ் நிதி மூலம் ஜூன் மாத முடிவுக்குள் 50,000 வென்டிலேட்டர்கள் அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் இன்றுவரை 20,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, மே மாதம் 14-ம் தேதிக்குப் பின் மத்திய அரசு சார்பில் டெண்டர் எதுவும் விடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவ நிபுணர்கள், அக்வா ஹெல்த் கேர் நிறுவனத்தின் தயாரிப்பு வென்டிலேட்டர்கள் தரமற்றவை எனக் கூறும் நிலையில், தரமற்ற உபகரணங்களைக் கொள்முதல் செய்வதன் மூலம் அரசாங்கம் ஏன் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிர்களைப் பணயம் வைக்கிறது எனவும் கௌரவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

ventilator for treatment
ventilator for treatment
பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா?

அக்வா ஹெல்த் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், அக்வா ஹெல்த் நிறுவனத்தின் வென்டிலேட்டர்கள் செயல்திறன் குறைந்தவை எனவும், ஆனால் அவற்றின் செயல்திறனை உயர்த்திக்காட்டும் மென்பொருளை உபயோகிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அக்வா நிறுவனத்தின் வென்டிலேட்டர்களை கவனிக்கத் தொடங்கிய மும்பை ஜேஜே மறுத்துவமையின் மருத்துவ நிபுணர்கள், இந்த சிக்கலைக் கண்டறிந்துள்ளனர். இந்த வென்டிலட்டர்களில், அதிகப்படியான ஆக்ஸிஜன் வழங்குவதில் சிக்கல் உள்ளதும், அவசர பிரிவில் இருக்கும் நோயாளிகளின் தேவையைப் பூர்த்திசெய்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு