Published:Updated:

`காங்கிரஸ் மகாத்மாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி நாட்டை மோசமான நிலைக்கு கொண்டுவந்துவிட்டது' - பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

`காங்கிரஸ் கட்சி புதைத்து வைத்த இதுபோன்ற இன்னும் பல ஊழல்கள் உள்ளன. வரும் நாள்களில் அவை அம்பலப்படுத்தப்படும்' - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் சப் இன்ஸ்பெக்டர் ஆள்சேர்ப்பில் ஊழல் நடந்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ``காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பி.எஸ்.ஐ பணி நியமன ஊழலில் டி.ஐ.ஜி ஒருவருக்குத் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை விசாரிக்கவோ, சஸ்பெண்ட் செய்வது பற்றியோகூட அவர்கள் கவலைப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்
ட்விட்டர்

ஆனால் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். உயர் அதிகாரிகளை கைதுசெய்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சி தங்கள் தவறுகளை உணர வேண்டும். காங்கிரஸ் புதைத்து வைத்த இதுபோன்ற இன்னும் பல ஊழல்கள் உள்ளன. வரும் நாள்களில் அவை அம்பலப்படுத்தப்படும். அரசு வழக்கறிஞர்கள் பணி நியமனம் தொடர்பான கே.பி.எஸ்.சி ஊழல் வழக்கில் ஒருவரைக்கூட சஸ்பெண்ட் செய்யவில்லை. மகாத்மா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர்கள் தவறாகப் பயன்படுத்தி நாட்டை வருந்தத்தக்க நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!