Published:Updated:

குஜராத் : வாக்கு எண்ணும் மையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற காங்கிரஸ் வேட்பாளரால் பரபரப்பு!

காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி ( ட்விட்டர் )

காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி, மதோமோஜானி வாக்கு எண்ணும் மையத்தில் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத் : வாக்கு எண்ணும் மையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற காங்கிரஸ் வேட்பாளரால் பரபரப்பு!

காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி, மதோமோஜானி வாக்கு எண்ணும் மையத்தில் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி ( ட்விட்டர் )

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்துவருகிறது. மொத்தமுள்ள 182 இடங்களில் 152-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில், குஜராத்தில் காந்திதாம் தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி, மதோமோஜானி வாக்கு எண்ணும் மையத்தில் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Electronic Voting Machine) முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி
காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி
ட்விட்டர்

வாக்கு இயந்திரங்கள் சரியாக சீல் வைக்கப்படாததாலும், சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கையெழுத்து இல்லாதது தொடர்பாகவும் காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்காததால், அவர் அங்கேயே இருந்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் அவரைப் புறக்கணித்ததால், அவர் அந்த வாக்கு எண்ணும் மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.