Published:Updated:

``காங்கிரஸால் பாஜக-வைத் தடுக்க முடியாது; அரசியல்ரீதியாகக் குரல் கொடுக்கவேண்டிய நேரமிது!" - ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

``தற்போதைய காலகட்டத்தில் ராஜஸ்தான் மக்கள், காங்கிரஸ், பா.ஜ.க-வைத் தவிர்த்து, அரசியல்ரீதியாகக் குரல் கொடுக்கவேண்டிய தேவை மிகவும் அதிகமாக உள்ளது." - அசாதுதீன் ஒவைசி

``காங்கிரஸால் பாஜக-வைத் தடுக்க முடியாது; அரசியல்ரீதியாகக் குரல் கொடுக்கவேண்டிய நேரமிது!" - ஒவைசி

``தற்போதைய காலகட்டத்தில் ராஜஸ்தான் மக்கள், காங்கிரஸ், பா.ஜ.க-வைத் தவிர்த்து, அரசியல்ரீதியாகக் குரல் கொடுக்கவேண்டிய தேவை மிகவும் அதிகமாக உள்ளது." - அசாதுதீன் ஒவைசி

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரான அசாதுதீன் ஒவைசி, ராஜஸ்தானில், தன்னுடைய முதல் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைத் தளமாகக்கொண்டு, கல்வியாளர் ஜமீல் கான் தலைமையில் ஆறு பேர்கொண்ட மாநிலக்குழு ஒன்றை நேற்று (31-05-2022) அறிவித்தார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம், ராஜஸ்தானில் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஒவைசி கலந்துரையாடினார்.

அப்போது ஊடகத்தின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஒவைசி, ``இங்கு காங்கிரஸால், பா.ஜ.க-வைத் தடுக்க முடியாது என்று நினைக்கிறேன். மக்களுக்கு எதிரான ஆட்சி, தவறான நிர்வாகம்தான் இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசியல் பிரச்னைகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களுக்கென அரசியல் தலைமையைக்கொண்டிருக்க வேண்டும்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

இதன் மூலம், நாட்டில் வகுப்புவாதம் குறையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வளரும், சட்டத்தின் ஆட்சியும் பலப்படுத்தப்படும். ஆனால், சமூகத்தின் ஒரு பிரிவை முற்றிலுமாகப் புறக்கணித்து, அவர்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் தீர்வு காணாதபோது, சமூகம், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கான பதில்கள் தேடப்படுகின்றன. மேலும் அரசியல் தலைமையின் தேவையும் இங்கு ஏற்படுகிறது. காங்கிரஸையும், பா.ஜ.க-வையும் தவிர, அரசியல் நோக்கத்துக்கான இடமும் இங்கு இருக்கிறது. எனவே, தற்போதைய காலகட்டத்தில் ராஜஸ்தான் மக்கள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வைத் தவிர்த்து, அரசியல்ரீதியாகக் குரல் கொடுக்கவேண்டிய தேவை மிகவும் அதிகமாக உள்ளது" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism