Published:Updated:

பஞ்சாப்: காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

பஞ்சாப் தேர்தல் |ஆம் ஆத்மி ( ட்விட்டர் )

காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் அமைச்சருமான ஜக்மோகன் சிங் காங் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

பஞ்சாப்: காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் அமைச்சருமான ஜக்மோகன் சிங் காங் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

Published:Updated:
பஞ்சாப் தேர்தல் |ஆம் ஆத்மி ( ட்விட்டர் )

பஞ்சாப்பில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியிருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆளும் காங்கிரஸ் முனைப்பு காட்டிவருகிறது. காங்கிரஸ் தேர்தல் களத்தில் கடும் போட்டியை எதிர்கொண்டுவரும் நிலையில். அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் அமைச்சருமான ஜக்மோகன் சிங் காங் அங்கிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்திருப்பது காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப்பின் கரார் சட்டமன்றத் தொகுதி தனக்கு வேண்டும் எனக் கேட்டிருந்த ஜக்மோகன் சிங் காங்குக்குக் கட்சித் தலைமை அந்தத் தொகுதியை தர மறுத்து, அந்தத் தொகுதியை விஜய் சர்மா என்பவருக்கு வழங்கியது. இதனால் அதிருப்தியடைந்த ஜக்மோகன் சிங், `எனக்கு அந்தத் தொகுதி வழங்கவில்லையென்றால், கராரில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன்' என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி
காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி

இந்த நிலையில், தன் மகன்கள் யத்விந்திர சிங் கான்ங், அம்ரீந்தர் சிங் காங் ஆகியோருடன் அவர் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

இது தொடர்பாக பஞ்சாப்பின் ஆம் ஆத்மி தலைவரும், கட்சியின் இணைப் பொறுப்பாளருமான ராகவ் சாதா தனது ட்விட்டர் பக்கத்தில், ``பஞ்சாப் காங்கிரஸுடன் அதிருப்தியடைந்த, மூன்று முறை கேபினெட் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த ஜக்மோகன் சிங் காங் தன் மகன்கள் இருவருடன் ஆம் ஆத்மியில் இணைந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்
ட்விட்டர்

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களைக் கட்சியில் இணைத்துக்கொண்டார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வலுப்பெற்றுவருகிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஜக்மோகன் சிங் காங் 2002 முதல் 2007-ம் ஆண்டு வரை அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism