Published:Updated:

``வெறுப்புகளால் நம் சமூகம் பிளவுபடுகிறது; அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!" - மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

``இந்தியாவின் அடிப்படைகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. வெறுப்புகளால் சமூகம் பிளவுபடுகிறது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்." - மல்லிகார்ஜுன கார்கே

தேசிய தலைநகர் டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், கட்சியின் 138-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை, காங்கிரஸின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சிக்கொடி ஏற்றித் தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய கார்கே, ``இந்தியா ஒரு வெற்றிகரமான, வலுவான ஜனநாயக நாடாக மட்டும் உருவெடுக்காமல், சில தசாப்தங்களில் பொருளாதாரம், அணுசக்தி, மூலோபாயத் துறைகளில் வல்லரசாக விளங்கியது.

சோனியா , ராகுல் - காங்கிரஸ் 138-வது நிறுவன தினம்
சோனியா , ராகுல் - காங்கிரஸ் 138-வது நிறுவன தினம்

இது தானாக நடக்கவில்லை. ஜனநாயகத்தின் மீதான காங்கிரஸின் நம்பிக்கை, அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்லும் சித்தாந்தம், அனைவருக்கும் சம உரிமைகள், வாய்ப்புகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் மீதான முழு நம்பிக்கையின் காரணமாக நடந்தது.

இன்று இந்தியாவின் அடிப்படைகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. வெறுப்புகளால் சமூகம் பிளவுபடுகிறது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

அரசாங்கம் இதைக் கண்டுகொள்வதில்லை. இவற்றுக்கெதிரான நம் போராட்டத்தில், இளைஞர்கள், பெண்கள், பட்டியலினத்தவரை காங்கிரஸ் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும். இதை `பாரத் ஜோடோ யாத்திரை' என ராகுல் காந்தி ஏற்கெனவே தொடங்கிவிட்டார். நாட்டு மக்களிடமும் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. காங்கிரஸின் போட்டியாளர்களை இது திணறடித்திருக்கிறது. எனவே நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் இந்தப் பணியில் அனைவரும் இணைய வேண்டும்" எனக் கூறினார்.