Published:Updated:

``காங்கிரஸ் தனது சொந்தத் தலைவர்களின் முட்டாள்தனத்தோடு போராடுகிறது!" - மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

``காங்கிரஸ் சில சமயங்களில், ஒருவித போலியான வெறுப்புணர்வை வளர்த்து, இந்தியாவின் மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மையின் வலிமையைக் கெடுக்கிறது." - மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி

``காங்கிரஸ் தனது சொந்தத் தலைவர்களின் முட்டாள்தனத்தோடு போராடுகிறது!" - மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி

``காங்கிரஸ் சில சமயங்களில், ஒருவித போலியான வெறுப்புணர்வை வளர்த்து, இந்தியாவின் மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மையின் வலிமையைக் கெடுக்கிறது." - மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி

Published:Updated:
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸிலிருந்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ``காங்கிரஸ் தனது சொந்தத் தலைவர்களின் முட்டாள்தனத்தோடு போராடுகிறது" என மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி காங்கிரஸைச் சாடியிருக்கிறார். ஹஜ் நோக்குநிலை நிகழ்ச்சியொன்றில் இன்று கலந்துகொண்ட மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பா.ஜ.க., மோடி மீதான காங்கிரஸின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அப்பாஸ் நக்வி, ``காங்கிரஸின் இருப்பு வென்டிலேட்டரில் இருக்கும்போது, ​​​​அதன் தலைவர்களின் `முட்டாள்தனம்' மட்டும் முடுக்கத்திலேயே இருக்கிறது.

காங்கிரஸ் -பாஜக
காங்கிரஸ் -பாஜக

தீங்கு தரக்கூடிய சித்தாந்தத்துடன் காங்கிரஸ் போராடவில்லை. ஆனால், தங்களின் சொந்தத் தலைவர்களின் முட்டாள்தனத்துடன் காங்கிரஸ் போராடுகிறது. சில நேரங்களில் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தான், இலங்கை அல்லது வேறு சில நாட்டோடு ஒப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் அவர்கள், ஒருவித போலியான வெறுப்புணர்வை வளர்த்து, இந்தியாவின் மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மையின் வலிமையைக் கெடுக்கிறார்கள். இது போன்ற செயல்கள் காங்கிரஸ் தலைவர்களின் உச்சகட்ட அறியாமை மற்றும் முட்டாள்தனைத்தையே பிரதிபலிக்கிறது" என காங்கிரஸை கடுமையாகச் சாடினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism