Published:Updated:

``ஆர்.எஸ்.எஸ்., பாஜக-வுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதப் பகையும் இல்லை..!" - ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் முதல்வர்

``பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பகையும் இல்லை'' என ராஜஸ்தான் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

``ஆர்.எஸ்.எஸ்., பாஜக-வுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதப் பகையும் இல்லை..!" - ராஜஸ்தான் முதல்வர்

``பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பகையும் இல்லை'' என ராஜஸ்தான் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதப் பகையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சமீபத்தில் என்னைச் சந்திக்கவந்தனர். அப்போது இந்தச் செய்தியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஜி-யிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் தெரிவிக்குமாறு அவர்களிடம் கூறினேன்.

பாஜக -மோடி, அமித் ஷா
பாஜக -மோடி, அமித் ஷா

ஆனால், வன்முறையை எந்த வடிவத்திலும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. வன்முறையை யாரும் ஏற்கக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்கள் எந்தக் கட்சி, சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதரவற்ற பசுக்களுக்காக நடத்தப்படும் மாட்டு தொழுவங்களுக்கு அரசு மானியம் 6 மாதங்களுக்கு பதிலாக 9 மாதங்களுக்கு வழங்கப்படும். மாநில அரசு 1.56 கோடி ரூபாய் மானியத்தில் ஆதரவற்ற பசுக்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும், பசுக் கொட்டகைகள் திறக்கப்பட்டுவருகின்றன'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism