Published:Updated:

``தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குச் சுதந்திரம் இல்லை” - கம்பு சுற்றும் கார்த்தி சிதம்பரம்; பின்னணி என்ன?

கார்த்தி சிதம்பரம்

அவ்வப்போது தி.மு.க-வுக்கு எதிராகப் பேசிவரும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் லேட்டஸ்ட் அட்டாக் இரு கூடாரங்களையும் பரபரப்பாக்கியிருக்கிறது.

``தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குச் சுதந்திரம் இல்லை” - கம்பு சுற்றும் கார்த்தி சிதம்பரம்; பின்னணி என்ன?

அவ்வப்போது தி.மு.க-வுக்கு எதிராகப் பேசிவரும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் லேட்டஸ்ட் அட்டாக் இரு கூடாரங்களையும் பரபரப்பாக்கியிருக்கிறது.

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

``தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது” என்று சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் பற்றவைத்திருக்கிறார். இவ்வாறு, கூட்டணியில் இருந்துகொண்டே, தி.மு.க-வுக்கு எதிராக கார்த்தி பேசுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இம்முறை டேமேஜ் ஓவராக இருக்கும்போல்தான் தெரிகிறது.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் பேசியபோது, ``பா.ஜ.க-வில் இருந்துகொண்டே சுப்பிரமணியன் சுவாமி அந்தக் கட்சித் தலைவர்களையே கிண்டலடித்துப் பேசுவது போன்றுதான், கூட்டணியில் இருந்துகொண்டு கார்த்தி சிதம்பரம் பேசிவருகிறார். காங்கிரஸ் தலைவர்களால் வெளிப்படையாகப் பேச முடியாதபோது, அதை கார்த்தி தலையில் கட்டிவிடுகின்றனர். இவர் ஒருவராவது இப்படிப் பேசுகிறாரே என்ற எண்ணத்தில்தான் யாருமே அவரைக் கண்டிப்பதில்லை.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

கார்த்தி சொல்லியிருப்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், தி.மு.க ஆட்சி அமைத்த இந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே முதல்வராக ஸ்டாலின் நற்பெயர் எடுத்தாலும், ஆட்சியின் செயல்பாடுகள், அமைச்சர்கள், அதிகாரிகள் செயல்பாடுகளைப் பார்க்கும்போது பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றனதான். முதல்வர் மட்டும் நல்லவராக இருந்தால் போதுமா... அவர் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டியவர்கள் அப்படி நடப்பதில்லை என்பதுதான் பிரச்னையே.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், லோக்கல் கட்சியினர், போலீஸார், அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது தவறு இருந்தபோதும், ஆட்சிக்குத் தலைமை தாங்குகிற ஸ்டாலின் பெயர்தான் வெகுவாக அடிபடும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமல்படுத்த முயற்சித்த எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். டாஸ்மாக் கடையை அடைக்கச் சொல்லிப் போராட்டம் நடத்தினார் ஸ்டாலின். ஆனால், இன்றோ கடைகளை மாற்றியமைக்கிறோம் என்கிற பெயரில் புதுப்புது ஏரியாக்களில் கடையைத் திறந்துவருகின்றனர்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

மின் கட்டண உயர்வை எதிர்த்துவிட்டு, இன்று இவர்கள் ஏற்றப்பார்க்கிறார்கள். இது பற்றியெல்லாம் எதிர்த்து பேச வேண்டும், தவறான பாதையில் அரசு செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாங்கள் நினைப்பதை ஒருபோதும் எங்களால் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியவில்லை. வெளிப்படையாகப் பேசினால் கூட்டணி தர்மமாகாதோ என்ற அச்சத்தில் கடந்து சென்றுவிடுகிறோம். வெளிப்படையாகப் பல விஷயங்களைப் பேசும் கார்த்தி சிதம்பரத்தால்கூட மேற்கண்ட விவகாரங்களுக்கு பதிலளித்துப் பேச முடியாது.

மோடி செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவுக்காக சென்னை வந்தபோது, செஸ் விளம்பரங்களில் மோடி படம் இல்லாததால், பா.ஜ.க-வினர் மோடி படத்தை ஒட்டினர். அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தது போலீஸ். அவர்களைத் தொடர்ந்து ஒட்டப்பட்ட மோடி படம்மீது கறுப்பு மை பூசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அதைக் கண்டித்து கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியின் அதிகப்படியான எதிர்ப்பு என்பது இவ்வளவுதான்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சுதந்திரம் இருந்திருந்தால் தி.மு.க அரசின் தவறுகளை ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வைவிட அதிகமாக சிந்தித்து நாங்கள் சொல்லிக்கொண்டிருப்போம். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகளே உள்ள நிலையில், தற்சமயம் தி.மு.க ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் பேசினால் நிச்சயம் சீட் ஒதுக்கீட்டில் கிடுக்குப்பிடி போடும் தி.மு.க. அதனால், வெளிப்படையாகப் பேச முடியாததால், இப்படிப் பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்” என்று முடித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை மாநிலத் தலைவர் ரஞ்சன்குமார் நம்மிடம், “கார்த்தி சிதம்பரம் அப்படிப் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. வித்தியாசமாகப் பேசினால் லைம்லைட்டில் இருக்கலாம் என்கிற உத்தியை கடைப்பிடித்துவருகிறார் கார்த்தி. கட்சியின் கருத்தோட்டத்தை மையப்படுத்திப் பேசுவதே இல்லை. மற்றபடி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்று சொல்வது சரியல்ல. பேசவேண்டிய மேடை இருந்தால், நேரம் அமையும்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான காலச்சூழல் தற்சமயம் இல்லை.

ரஞ்சன்குமார்
ரஞ்சன்குமார்

நான் எஸ்.சி துறைத் தலைவராக இருப்பதால் சொல்கிறேன், பூர்வகுடிகள், தலித்துகள் தொடர்பான நிறைய பிரச்னைகள் என் கவனத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. அவற்றுக்காகப் போராட நேரம் பார்த்துவருகிறோம். பெரம்பூரில் ரயில்வே நிலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளை அகற்றவுள்ளனர். அதைக் கண்டித்தும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். எதிர்க்க முடியாத சூழல் இல்லை. கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்வொன்றில், முதல்வர் முன்னிலையிலேயே ’முதல்வர் கூட்டணிக் கட்சியினரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார்’ என்று பகிரங்கமாகச் சொன்னார் அழகிரி. பேரறிவாளனை முதல்வர் சந்தித்ததை ஆட்சேபித்தார் அழகிரி. அதற்கு எதிராக அமைதிவழிப் போராட்டமே நடத்தினோம். கூட்டணியில் இருப்பதால் தி.மு.க அரசைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை” என்றார்.