Published:Updated:

``காங்கிரஸ் ஊழலைக் கொண்டாடவும், அதற்காகப் போராடவும் கற்றுக்கொடுத்திருக்கிறது!" - பாஜக தலைவர் தாக்கு

பாஜக தலைவர் சம்பித் பத்ரா ( ட்விட்டர் )

``500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ராகுல் காந்தி அமலாக்கப் பிரிவு முன்பு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்." - பாஜக தலைவர் சம்பித் பத்ரா

``காங்கிரஸ் ஊழலைக் கொண்டாடவும், அதற்காகப் போராடவும் கற்றுக்கொடுத்திருக்கிறது!" - பாஜக தலைவர் தாக்கு

``500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ராகுல் காந்தி அமலாக்கப் பிரிவு முன்பு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்." - பாஜக தலைவர் சம்பித் பத்ரா

Published:Updated:
பாஜக தலைவர் சம்பித் பத்ரா ( ட்விட்டர் )

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்காக அமலாக்க இயக்குநரகத்தில் ராகுல் காந்தி ஆஜராகியிருக்கிறார். ``இந்த வழக்கு விசாரணையை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, அரசியல் உள்நோக்கத்துடன் நகர்த்திக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் காங்கிரஸைப் பழிவாங்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியிருக்கிறது" என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பா.ஜ.க-வைச் சாடிவருகின்றனர். இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் சம்பித் பத்ரா இந்த வழக்கு விசாரணை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஊழலுக்காக சத்தியாகிரகம் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை உலகம் பார்க்கிறது. மகாத்மா காந்தி உலகை உண்மைக்காகப் போராடக் கற்றுக் கொடுத்தார். ஆனால் காங்கிரஸ் ஊழலைக் கொண்டாடவும், அதற்காகப் போராடவும் உலகுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி
ட்விட்டர்

ராகுல் காந்தி ஏற்கெனவே ஜாமீனில்தான் இருக்கிறார். இது அரசியல் வழக்கு அல்ல... காங்கிரஸ் தனது ஏஜென்ஸிகளை தவறாகப் பயன்படுத்திப் போராடவைத்திருக்கிறது. 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ராகுல் காந்தி அமலாக்கப் பிரிவு முன்பு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்துவதாகக் கூறுகிறார்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கில் உள்ள ‘சத்தியத்தை’ (உண்மையை) முதலில் வெளிப்படுத்துங்கள்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையில், `காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தாலும், எங்களின் ‘சத்யாகிரக’ பேரணி தொடரும்!' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism