Published:Updated:

நெல்லை: ``கல்குவாரி விபத்துக்குக் காரணமான அதிகாரியைத் தூக்கிலிட வேண்டும்!" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

கே.எஸ்.அழகிரி

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

நெல்லை: ``கல்குவாரி விபத்துக்குக் காரணமான அதிகாரியைத் தூக்கிலிட வேண்டும்!" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் முருகன், விஜய், செல்வன் ஆகிய மூவர் மீட்கப்பட்டனர். அதில் செல்வன் உயிரிழந்த நிலையில் முருகன், விஜய் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவரிடம் நலம் விசாரித்த கே.எஸ்.அழகிரி
காயமடைந்தவரிடம் நலம் விசாரித்த கே.எஸ்.அழகிரி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்.பி உள்ளிட்ட அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து கவனக்குறைவு காரணமாக ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குவாரிகளில் விதிமுறை மீறல்கள் உள்ளதா என்பது பற்றி அரசு ஆய்வு செய்ய வேண்டும், இந்த விவகாரத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

நெல்லை கல்குவாரி சட்டவிரோதமாக நடந்தது எனத் தெரியவந்திருக்கிறது. அதைக் கண்காணிக்காமல் கடமையைச் செய்யத் தவறிய அதிகாரியைத் தூக்கிலிட வேண்டும், அதிகாரிகள் மெத்தனப்போக்கே விபத்துக்கு காரணம். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லையில் கல்விக்கு வித்திட்ட காமராஜர், பசுமைப்புரட்சியை கொண்டுவந்த இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகலைத் திறப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இருவரும் மக்களிடம் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்கள். நூறாண்டு கால இயக்கமான காங்கிரஸ் கட்சியில் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவிகித பொறுப்பை வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அதன் மூலம் மக்கள் பிரசனைகளை அறிய வாய்ப்பு உள்ளது.

மருத்துவமனையில் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸார்
மருத்துவமனையில் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸார்

நமது மதத்தை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூறுகிறார்கள். நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ் மற்றும் காந்தியின் கையில் ராமர் இருந்த போது அமைதி நிலவியது, ஆர்.எஸ்.எஸ் கையில் ராமர் இருக்கும் போதுதான் கலவரம் ஏற்படுகிறது. மதம், கடவுளின் பெயரில் அரசியல் செய்யக் கூடாது” என்றார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த காமராஜர், இந்திரா சிலைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்களான ரூபி மனோகரன், ராஜேஷ்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism