Published:Updated:

குஜராத்: ``பாஜக-வுக்கும் காங்கிஸுக்கும் இடையே கணவன்-மனைவிபோல் உறவு இருக்கிறது" - கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் - பாஜக - காங்கிரஸ்

``பா.ஜ.க-வின் மனைவிபோல காங்கிரஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் முழுக்க முழுக்க பா.ஜ.க-வின் பாக்கெட்டில்தான் இருக்கின்றனர்." - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்: ``பாஜக-வுக்கும் காங்கிஸுக்கும் இடையே கணவன்-மனைவிபோல் உறவு இருக்கிறது" - கெஜ்ரிவால்

``பா.ஜ.க-வின் மனைவிபோல காங்கிரஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் முழுக்க முழுக்க பா.ஜ.க-வின் பாக்கெட்டில்தான் இருக்கின்றனர்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால் - பாஜக - காங்கிரஸ்

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதோடு, 27 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வின் ஆட்சியே மீண்டும் தொடருமா அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்குமா இல்லை பஞ்சாப்பைப்போல இங்கும் ஆம் ஆத்மி வெற்றி பெறுமா என்ற ஆவலும் ஒருபுறம் தொற்றிக்கொண்டது.

காங்கிரஸ் - பாஜக - ஆம் ஆத்மி
காங்கிரஸ் - பாஜக - ஆம் ஆத்மி

குஜராத்தில் தற்போது பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டியே நிலவுகிறது. இதில் பாஜக-வும், காங்கிரஸும் ஒன்றையொன்று விமர்சித்துக்கொள்கின்றன. இந்த நிலையில் தனியார் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்த இரண்டு கட்சியையுமே ஒருசேர சாடியிருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், ``பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கணவன்-மனைவி/ சகோதர-சகோதரி உறவு இருக்கிறது. நேற்றுக்கூட அமித் ஷாவின் பேட்டியைப் பார்த்தேன், அதில் பா.ஜ.க., காங்கிரஸுக்கு இடையேதான் போட்டி என்று அவர் கூறுகிறார். காங்கிரஸும் அதே கதையுடன் விளையாடுகிறது. பா.ஜ.க-வின் மனைவிபோல காங்கிரஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் முழுக்க முழுக்க பா.ஜ.க-வின் பாக்கெட்டில்தான் இருக்கின்றனர்" என்று கூறினார்.

மேலும், குஜராத்திலுள்ள அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களையும், தங்கள் விவாத நிகழ்ச்சிகளுக்கு எந்தவொரு ஆம் ஆத்மி தலைவரையும் அழைக்கக் கூடாது என பா.ஜ.க மிரட்டுவதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.