Published:Updated:

`பிரதமர் மோடியைக் கொலைசெய்யத் தயாராகுங்கள்’... சர்ச்சையான பேச்சு - காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ கைது

ராஜா பதேரியா

அரசியலமைப்பைக் காப்பாற்ற பிரதமர் மோடியைக் கொலைசெய்யத் தயாராகுங்கள் என்று சொன்ன மத்தியப் பிரதேச காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராஜா கைதுசெய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராஜா பதேரியா கட்சித் தொண்டர்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசும்போது, ``பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை ஒழித்துவிடுவார். மதம், மொழி, சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பார். பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்கள் ஆபத்தில் இருக்கின்றனர். எனவே, அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரதமர் மோடியைக் கொலைசெய்யத் தயாராக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் சிவராஜ் சௌகானும் கண்டனம் தெரிவித்திருந்ததோடு, ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை குறித்தும் விமர்சித்திருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியினரால் மோடியைக் களத்தில் சந்திக்க முடியாது என்பதால், அவரைக் கொலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் பேசுகிறார் என்றும் சௌகான் குறிப்பிட்டிருந்தார்.

`பிரதமர் மோடியைக் கொலைசெய்யத் தயாராகுங்கள்’... சர்ச்சையான பேச்சு - காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ கைது

மத்தியப் பிரதேச அரசு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் ராஜா மீது வழக்கு பதிவுசெய்தனர். தனது கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து ராஜா வெளியிட்ட விளக்கத்தில், ``தேர்தலில் மோடியைத் தோற்கடிக்கத் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில்தான் பேசினேன்” என்றும், ``மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கையை பின்பற்றுபவன்” என்றும் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியும் ராஜாவின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் நிர்வாகி பவன் கெரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ராஜாவின் பேச்சு கண்டனத்துக்குரியது. பிரதமர் உட்பட யாருக்கு எதிராகவும், இது போன்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டு இருந்ததால் இன்று திடீரென ராஜா காலையில் கைதுசெய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.