Published:Updated:

``மோடியை கொல்லத் தயாராக இருக்க வேண்டும்" - காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை

காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா

``சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டுமென்றால் நீங்கள் மோடியைக் கொல்லத் தயாராக இருக்க வேண்டும்" என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

``மோடியை கொல்லத் தயாராக இருக்க வேண்டும்" - காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை

``சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டுமென்றால் நீங்கள் மோடியைக் கொல்லத் தயாராக இருக்க வேண்டும்" என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராஜா படேரியா நேற்று பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில், "சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டுமானால் மோடியைக் கொல்லுங்கள். தேர்தலை அவரே முடித்துவைப்பார். மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவார். அவருடைய ஆட்சியில் பட்டியலின மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். எனவே, தீமையை வெல்ல நீங்கள் மோடியைக் கொல்லத் தயாராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜா படேரியா, "பிரதமரைத் தோற்கடிக்கச் செய்யுங்கள் என்ற அர்த்தத்தில்தான் பிரதமரைக் கொல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் என் கருத்துகள் தவறாக விளக்கப்பட்டிருக்கின்றன" எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம், "இது மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்தும் படேரியாவின் கருத்தை நான் கேள்விப்பட்டேன். இந்த காங்கிரஸ் இத்தாலிக்குச் சொந்தமானது. இந்தச் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர்-ஐ உடனடியாக செய்யுமாறு எஸ்.பி-க்கு கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.