Published:Updated:

``பாஜக-வுக்கு எதிராக... எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!" - மல்லிகார்ஜுன் கார்கே

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

`ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியெழுப்புவது, பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நீர்த்துப்போகச் செய்கிறது.' - மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், 4-ல் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து 2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தியே ஆகவேண்டுமென்று பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒருபுறம் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிரணியைத் திரட்ட, தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவும் பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகளை ஓர் அணியாக திரட்ட முயன்று வருகிறார். இதற்கிடையில், பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிராந்திய காட்சியாக மாறும், ஆம் ஆத்மி இனி தேசியக் கட்சி என கூறிவருகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார், ``ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு விருப்பமில்லை என்றும், பா.ஜ.க-வுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க முயன்றால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவும், ஆதரவு கொடுக்கவும், வலு சேர்க்கவும் தயாராக இருக்கிறேன்" என்று நேற்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
ட்விட்டர்

இந்த நிலையில் இதுபோன்ற கேள்விகளுக்கு, காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ``ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியை பிரச்னையாக எழுப்புவதன் மூலம், பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என இன்று கூறியுள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்துப் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, ``கடந்த 10 நாள்களில் பெட்ரோல், டீசல் விலையை எட்டு ரூபாய்க்கு மேல் உயர்த்தி ஏழைகளின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடிக்கிறது. மேலும், உரங்களுக்கான மானியத்தையும் அரசு குறைத்துள்ளது. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்" எனக் கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தற்போதைய தலைவர், காங்கிரஸின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism