Published:Updated:

``பாஜக இனி `மோடி-ஷா' கட்சி!" - காங்கிரஸ் தலைவர் காட்டம்

இமாசலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர்

காங்கிரஸ் குறித்த ஜே.பி.நட்டாவின் விமர்சனத்துக்கு, ``நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் நலனுக்காக பா.ஜ.க என்ன செய்துள்ளது" என இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பா.ஜ.க-வின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.பி.நட்டா, சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், ``காங்கிரஸ் இந்தியமோ, தேசியமோ அல்ல. அது ஒரு அண்ணன்,தங்கை கட்சி மட்டுமே. இந்தியாவில் குடும்ப அரசியலை முன்னெடுக்காமல் இயங்கும் கட்சிகளில், பா.ஜ.க-வை தவிர நாட்டில் வேறு எந்த கட்சியும் இல்லை. பல எதிர்க்கட்சிகள் பிராந்திய கட்சிகளாக மாறிவிட்டன" என காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு, இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் பதிலளித்திருக்கிறார்.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

செய்தியாளர்களிடத்தில் இது தொடர்பாகப் பேசிய குல்தீப் சிங் ரத்தோர், ``இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதற்கு முன்பு, முதலில் காங்கிரஸின் வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் பெரும் பங்காற்றியுள்ளது. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, நாட்டின் நலனுக்காக பா.ஜ.க என்ன செய்துள்ளது. மோடி பிரதமரான பின்புதான், இந்தியாவின் வரலாறு பா.ஜ.க-வுக்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க தற்போது இரண்டு நபர்களின் கட்சியாக மாறிவிட்டது. இனி பா.ஜ.க-வின் பெயரை `மோடி-ஷா' கட்சி என்றுதான் மாற்ற வேண்டும்" என்று பா.ஜ.க-வை விமர்சித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism