Published:Updated:

``மாநிலவாரியாக பாஜக-வை எதிர்த்து போராடினால், தோற்கடிக்க முடியும்!” - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

``வங்காளத்தில் திரிணாமுல் தலைமையிலும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை தலைமையாகக்கொண்டும் போராட வேண்டும். இவ்வாறு மாநிலவாரியாக பா.ஜ.க-வை எதிர்த்து போராடினால், அதைத் தோற்கடிக்க முடியும்.” - ப.சிதம்பரம்.

``மாநிலவாரியாக பாஜக-வை எதிர்த்து போராடினால், தோற்கடிக்க முடியும்!” - ப.சிதம்பரம்

``வங்காளத்தில் திரிணாமுல் தலைமையிலும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை தலைமையாகக்கொண்டும் போராட வேண்டும். இவ்வாறு மாநிலவாரியாக பா.ஜ.க-வை எதிர்த்து போராடினால், அதைத் தோற்கடிக்க முடியும்.” - ப.சிதம்பரம்.

Published:Updated:
ப.சிதம்பரம்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால் பல அதிரடி முடிவுகள் கட்சிக்குள் எடுக்கப்பட்டுவருகின்ரன. முதலில், தோல்வி காரணமாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியிலிருந்து தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகச் செய்திகள் உலாவந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளாததால் அத்தகைய முடிவு எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டன. அடுத்த சில தினங்களிலேயே அதிரடி முடிவாக, காங்கிரஸ் தோல்வியடைந்த ஐந்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சோனியா காந்தி உத்தரவிட்டார். அதையடுத்து உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி
அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி

இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மாநிலவாரியாக பாஜக-வை எதிர்த்து போராடினால்தான், அவர்களைத் தோற்கடிக்க முடியும் என தனியார் ஊடகப் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

சிதம்பரம், ``ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் முழுநேர தலைமைத்துவத்தைப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு கட்சியும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநிலவாரியாகப் போராட வேண்டும். வங்காளத்தில் திரிணாமுல் தலைமையில் போராட வேண்டும். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் போராட வேண்டும். தலைமையாக, மாநிலவாரியாக பாஜக-வை எதிர்த்து போராடினால், அதைத் தோற்கடிக்க முடியும்" எனப் பேசினார்.

மேலும் இதே பேட்டியில் உ.பி தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய சிதம்பரம், "உ.பி-யில் பல ஆண்டுகளாகக் கட்சி வறண்டுகிடப்பதை நாம் அனைவரும் அறிவோம். முதலில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் தலைமைக்கு எச்சரித்திருந்தேன்" எனக் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism