Published:Updated:

கொரோனா: ``நெறிமுறைகள் பின்பற்றப்படும்... ஆனால் யாத்திரை நிறுத்தப்படாது'' - காங்கிரஸ்

சல்மான் குர்ஷித் ( ட்விட்டர் )

''பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தலில் ஏன் பிரசாரம் செய்தார்... சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தினை பிரத்யேக மதிய உணவு ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது?'' - சல்மான் குர்ஷித்

கொரோனா: ``நெறிமுறைகள் பின்பற்றப்படும்... ஆனால் யாத்திரை நிறுத்தப்படாது'' - காங்கிரஸ்

''பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தலில் ஏன் பிரசாரம் செய்தார்... சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தினை பிரத்யேக மதிய உணவு ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது?'' - சல்மான் குர்ஷித்

Published:Updated:
சல்மான் குர்ஷித் ( ட்விட்டர் )

கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ஜோடோ யாத்திரை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைக் கடந்து ஹரியானாவில் நிறைவடைகிறது. டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் ராகுல் காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் தி.மு.க எம்.பி கனிமொழி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்ற எம்.பி-க்கள் கலந்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் `கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், ராகுல் காந்தி தன் யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியிருந்தார்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

இதற்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், "கோவிட்-19 தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்சி பின்பற்றும், ஆனால் தற்போது ஹரியானாவில் நடந்துவரும் யாத்திரையை நிறுத்த மாட்டோம். இப்போது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை டெல்லியில் நுழையப்போகிறது. கொரோனா, ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் கண்டறியப்பட்டன.

மோடி
மோடி

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தலில் ஏன் பிரசாரம் செய்தார்... சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தினை பிரத்யேக மதிய உணவு ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது... பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்துவதற்கு அரசு பல சாக்குப்போக்குகளை கூறுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.