Published:Updated:

`பிரேக்குக்கு பதிலாக ஹாரன்'; `முதலாளிகளிடம் இந்தியா' - பட்ஜெட்டை விளாசும் காங்கிரஸ் தலைவர்கள்!

பட்ஜெட்டை விளாசும் காங்கிரஸ் தலைவர்கள்!
பட்ஜெட்டை விளாசும் காங்கிரஸ் தலைவர்கள்!

``அசாதாரண சூழலில் வாசிக்கப்பட்ட இந்த பட்ஜெட், ஏழை மக்களுக்கு உதவுவதாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அரசு நாட்டை விற்கச் சிந்தித்துக்கொண்டிருக்கிறது'' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

த்பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய பட்ஜெட்டை, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்களும் பலவிதமான கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர். மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சியினரான காங்கிரஸ் தலைவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்!

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
முதல் பட்ஜெட்டை வாசித்த தமிழர்; பெட்டி ரகசியம்; நார்த் ப்ளாக் அல்வா - பட்ஜெட் சுவாரஸ்யங்கள்!

சசி தரூர்

``மத்திய பட்ஜெட்டில் புதிதாக ஒன்றுமில்லை. நாட்டை பாதித்திருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் எந்தவொரு திட்டமுமில்லை. பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு பதிலாக, வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு, அதைப் பெரிதாகப் பேசிவருகிறது பா.ஜ.க அரசு'' என்று விமர்சித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``இந்த பட்ஜெட் திருப்தியளிக்கவில்லை'' என்றும் சொல்லியிருக்கிறார்.

சசி தரூர்
சசி தரூர்

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ``கார் மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் `என்னால் கார் பிரேக்கைச் சரிசெய்ய முடியவில்லை. அதனால், கார் ஹாரன் சத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன்' என்று சொல்வதைப்போல பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் இருக்கின்ரன'' என்று பட்ஜெட்டை கேலி செய்யும்விதமாகப் பதிவிட்டிருக்கிறார் சசி தரூர்.

ஆனந்த் ஷர்மா

முன்னாள் மத்தியமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் ஷர்மா, ``2021 மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. நுகர்வோர் தேவைக்கேற்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் வரைபடமாக இந்த பட்ஜெட் இல்லை. நிதியமைச்சர் என்பவர் தைரியமாக இருக்க வேண்டும். ஏழை எளியவர்கள், உழைக்கும் வர்க்க மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால், இங்கு நிதியமைச்சர் தைரியமில்லாமல், அரசின் சொற்படி நடப்பவராக இருக்கிறார்'' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஆனந்த் ஷர்மா
ஆனந்த் ஷர்மா
Twitter/@AnandSharmaINC
போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைஸர்.. சிகிச்சையில் 12 குழந்தைகள்! - கொடூரம் நடந்தது எப்படி?

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆதிர் ரஞ்சன் சௌவுத்ரி, ``மத்திய அரசு தன்னை காப்பாற்றிக்கொள்ள, தனியார்மயத்தை நாடிச் செல்கிறது. சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதால் வாக்குகளைக் கவர்ந்திழுப்பதற்காகவே இந்த பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. அசாதாரண சூழலில் வாசிக்கப்பட்ட இந்த பட்ஜெட், ஏழை மக்களுக்கு உதவுவதாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அரசு நாட்டை விற்பதற்குச் சிந்தித்துக்கொண்டிருக்கிறது'' என்று மத்திய பட்ஜெட்டை விமர்சித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ``பா.ஜ.க-வின் பட்ஜெட் ஏழை எளியவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரண்டு மாதங்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராடிவருகிற விவசாயிகளுக்கு ஆதரவாக பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இல்லாதது, மோடி அரசின் விவசாய விரோதப் போக்கைக் காட்டுகிறது. ஒட்டுமொத்த மக்களின் விரோத அரசாக இருப்பதையே இந்த பட்ஜெட் உறுதிப்படுத்துகிறது'' என்று கூறியிருக்கிறார்

மன்மோகன்சிங் அமைத்துக் கொடுத்த சிறந்த பொருளாதார மண்டலத்தை பா.ஜ.க அரசு அழித்துவிட்டது. எனவே, இவர்களால் சிறந்த பட்ஜெட்டை தர முடியாது.
கே.எஸ்.அழகிரி
ராகுல்- கே.எஸ்.அழகிரி
ராகுல்- கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``மோடி அரசு, மக்களின் கைகளில் பணம் கொடுப்பதை மறந்துவிட்டு, தனது முதலாளித்துவ நண்பர்களிடம் இந்தியாவின் சொத்துகளை ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறது'' என்று மத்திய பட்ஜெட்டை சாடியிருக்கிறார்.

ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், `` இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும் பூர்த்தி செய்யவில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாத பட்ஜெட் இது. பட்ஜெட் உரையைக் கேட்ட மக்களை நிர்மலா சீதாராமன் ஏமாற்றியிருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது'' என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

எதிர்பார்த்ததைப்போலவே தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
மத்திய பட்ஜெட்... கைகொடுக்கும் ‘ஆறு முகங்கள்!’ - பின்னணி விவரங்கள்

மேலும், ``பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும் முடிவு மக்களை வெகுவாக பாதிக்கும். ஜி.எஸ்.டி வரி விதிப்புகளில் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை. பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்புகள் அனைத்தும் ஒதுக்கீடாக மட்டுமே இருக்கின்றன. திட்டங்களாக இது நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும்'' என்று ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்.

மத்திய பட்ஜெட் குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு