Published:Updated:

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி... முக்கிய காரணங்கள் என்னென்ன?!

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்ற கேள்வியெழுத்திருக்கிறது.

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி... முக்கிய காரணங்கள் என்னென்ன?!

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்ற கேள்வியெழுத்திருக்கிறது.

Published:Updated:
குஜராத் தேர்தல்

குஜராத் மாநிலம், 182 தொகுதிகளைக் கொண்டது. இங்கு கடந்த டிசம்பர் 1, 5-ம் தேதி என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், வெற்றி பெறுவதற்கு பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் முனைப்புக் காட்டின. இதனால் அந்த மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவியது. மோர்பில் பால விபத்து போன்றவற்றின் காரணமாக பா.ஜ.கவுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று சொல்லப்பட்டது.

இதை உணர்ந்திருந்த பா.ஜ.க தலைவர்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். இதன் விளைவாகவாக குஜராத்தில் 156 இடங்களை பிடித்து வெற்றிவாகை சூடியிருக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி 17 இடங்களை பிடித்து படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட சில முக்கிய விஷயங்களில் காங்கிரஸ் போதுமான அளவுக்கு கவனம் செலுத்தவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

குஜராத் தேர்தல் முடிவு
குஜராத் தேர்தல் முடிவு

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சௌராஷ்டிரா மக்களின் ஓட்டு வங்கி குஜராத்தின் அரசியலைப் பெரிதும் தீர்மானிக்கிறது. இப்பகுதியில் நடந்த ஹர்திக் படேல் தலைமையிலான படிதார் ஒதுக்கீட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் காரணமாக பா.ஜ.கவுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இதனால் கடந்த 2017-ல் காங்கிரஸ் கட்சி சௌராஷ்டிரா மக்கள் வாழும் பகுதியில் 28 இடங்களைப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தது.

கூட்டணி கட்சியான என்.சி.பியும் 1 இடத்தை வென்றது. இந்த தாக்கம் நடப்பு தேர்தலிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் அது உதவவில்லை. மேலும் ஆம் ஆத்மியும் சௌராஷ்டிரா மக்கள் வாழும் பகுதியில் அதன் இருப்பை கடந்த ஆண்டு நடந்த சூரத் உள்ளாட்சித் தேர்தல்களின் செயல்திறன் மூலம் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குஜராத் தேர்தல் முடிவு
குஜராத் தேர்தல் முடிவு

இதற்கு அடுத்தபடியாக பழங்குடியினரின் வாக்கு வாங்கி 14% அளவுக்கு வலிமையாக இருக்கிறது. இந்த மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஆதரவு கொடுத்து வந்தனர். 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 27 பழங்குடியின இடங்களில் 17 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது. இதில் இரண்டு இடங்களை, காங்கிரஸின் கூட்டணி கட்சியான பாரதிய பழங்குடியினர் கட்சி வென்றது. இதை உடைப்பதற்காக பா.ஜ.க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

குறிப்பாக பிரதமர் மோடி இந்த பகுதியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கியதும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் ஆம் ஆத்மி கட்சியும் பழங்குடியினரின் வாக்குகளில் கவனம் செலுத்தியது. இதேபோல் எப்போதும் பா.ஜ.க மற்றும் இந்துத்துவா அலைகளை மட்டுமே காங்கிரஸ் எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

ஆனால் தற்போது ஆம் ஆத்மியும் போட்டிக்கு வந்ததால் மும்முனை போட்டி நிலவியது. மேலும் ஆம் ஆத்மியின் பிரசார யுக்தி குஜராத்தில் இருக்கும் கிராமப்புறங்களிலும் கவனத்தை ஈர்த்தது. கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸின் மீது தனது தாக்குதலைக் குவித்தார், குஜராத்தி வாக்காளர்களுக்கு தங்கள் வாக்குகளை காங்கிரஸூக்கு வாக்களித்து “விரயம்” செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்லாமியர்களின் வாக்குகளும் குறைந்திருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள். ஆனால் தற்போது அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM தேர்தலில் போட்டியிட்டது. இதுவும் வாக்கு பிரித்து செல்வதற்கு ஒரு காரணமாக அமைந்தது. மேலும் கடந்த 2017 -ம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை ராகுல் காந்தி தீவிரமாக களத்தில் செயல்பட்டார். ஆனால் குஜராத் தேர்தல் நேரத்தில் அவர் ஜோடோ யாத்திரையில் தான் கவனம் செலுத்தினார். பெயரளவுக்கு 2 கூட்டங்களில் மட்டும் கலந்து கொண்டார். இவையே காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததற்கு முக்கிய காரணம். எனவே இவற்றை அந்த கட்சி விரைந்து சரி செய்ய வேண்டும்" என்றனர்.