Published:Updated:

`பொங்கல் பரிசுத் தொகுப்பில் பாஜக-வினர் அரசியல் செய்வது வீண் வேலை!' - மாணிக்கம் தாகூர் எம்.பி தாக்கு

மாணிக்கம் தாகூர் எம்.பி

``மக்களுக்கு தரமான பொருள்களை கொண்டு செல்வது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். யாரிடம் கொள்முதல் செய்வது, எப்படி செய்வது என்பதில் தேவையில்லாமல் பா.ஜ.க-வினர் தலையிடக்கூடாது." - மாணிக்கம் தாகூர் எம்.பி

`பொங்கல் பரிசுத் தொகுப்பில் பாஜக-வினர் அரசியல் செய்வது வீண் வேலை!' - மாணிக்கம் தாகூர் எம்.பி தாக்கு

``மக்களுக்கு தரமான பொருள்களை கொண்டு செல்வது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். யாரிடம் கொள்முதல் செய்வது, எப்படி செய்வது என்பதில் தேவையில்லாமல் பா.ஜ.க-வினர் தலையிடக்கூடாது." - மாணிக்கம் தாகூர் எம்.பி

Published:Updated:
மாணிக்கம் தாகூர் எம்.பி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் காங்கிரஸ் அலுவலகத்தில் விருதுநகர்‌ மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தும், அதை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இதனையடுத்து அந்தப் பிரச்னையை மக்களிடம் கொண்டு சென்று நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக ரயில் பயணிகளிடமும், பொதுமக்களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படவுள்ளது. ஒரு மாதத்திற்குள்ளாக பொதுமக்களிடமும் ரயில் பயணிகளிடமும் கையெழுத்து பெற்று ரயில்வே அமைச்சரிடம் அந்த கோரிக்கை மனு வழங்கப்படும். நாடாளுமன்றத்திலும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வலியுறுத்துவேன். தொடர்ந்து அருப்புக்கோட்டையை புறக்கணிக்கும் மத்திய அரசை தட்டி எழுப்புகின்ற போராட்டமாக இந்த கையெழுத்து இயக்கம் இருக்கும்.

நேர்மையான முறையில் பொங்கல் தொகுப்பு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசியல் செய்யும் பா.ஜ.க-வின் பணி தேவையற்றது. மக்களுக்குத் தரமான பொருள்களை கொண்டு செல்வது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். யாரிடம் கொள்முதல் செய்வது, எப்படி செய்வது என்பதில் தேவையில்லாமல் பா.ஜ.க-வினர் தலையிடக்கூடாது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் பா.ஜ.க-வினர் அரசியல் செய்வது வீண் வேலை.

எம்.பி மாணிக்கம் தாகூர்
எம்.பி மாணிக்கம் தாகூர்

ராகுல் காந்தி எம்.பி யாத்திரை தொடங்கியதிலிருந்தே பா.ஜ.க-வினருக்கு கிலி பிடித்துவிட்டது. ராகுல் காந்தியின் யாத்திரை மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாக மாறும். இது கூட்டணிப்பற்றி பேசுவதற்கு இடமாக இல்லை. இது ஒரே மனதுடைய 18 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அதேப்போல கமல்ஹாசனும் யாத்திரையில் பங்கேற்றுள்ளார். ராகுல் காந்திக்கும், கமல்ஹாசனுக்கும் ஒரே எண்ண ஓட்டமாக இருந்ததால் இந்த யாத்திரையில் அவர் பங்கேற்றுள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரிவினையை தூண்டும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுகிறது. அதை எதிர்க்கும் வகையில் இந்த யாத்திரை அமைந்துள்ளது. அண்ணாமலைக்கு சர்வாதிகாரி என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என நினைக்கிறேன். சர்வாதிகாரம் என்பதை அமித் ஷாவிடமும், மோடியிடமும்தான் போய் பார்க்க வேண்டும். அர்த்தம் தெரியாமல் அண்ணாமலை புலம்பிக் கொண்டிருக்கிறார்" என்றார்.